தனியார்துறை இட ஒதுக்கீடு: வீரமணி வலியுறுத்தல்
சென்னை:
வரும் 16ம் தேதி திருவண்ணாமலையில் திராவிடர் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 126-வது ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் திராவிடர் எழுச்சிமாநாடு வருகிற 16ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.
அன்று காலை 10 மணிக்கு இந்துத்துவாவை முறியடிப்போம் என்ற தலைப்பில் கு.வெ.கி. ஆசான் தலைமையில்கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு கு.இளங்கோவன் தலைமையில் பேரணி நடக்கிறது.
இரவு திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகே நடைபெறும் மாநாட்டில் வைகோ, ராமதாஸ், தமிழககாங்கிரஸ் தலைவர் வாசன், திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் நல்லகண்ணு உட்பட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
மாநாட்டில் இந்துத்துவா எதிர்ப்பு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்படும்.
தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுருத்தி அடுத்த மாதம்டெல்லியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையில் பேரணி நடைபெறுகிறது. இதில் திராவிடர் கழகம்உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.
பேரணி இறுதியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரிடம் மனுக்கள்கொடுக்கப்படும் என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications