18 சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஜெ. உதவி
சென்னை:
18 விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தைச் சேர்ந்த 18 சுதந்திரப் போராட்ட தியாகிகள் தங்களுக்கு தியாகிகளுக்கான ஓய்வூதியம் வழங்கக்கோரி அரசுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இதைப் பரிவுடன் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று, சுதந்திரத்துக்காகசிறையில் அடைபட்டு துன்பம் அனுபவித்த இந்த 18 பேருக்கும் ஓய்வூதியம் வழங்க ஆணையிட்டுள்ளார்.
அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 3,000மும் மருத்துவப்படியாக ரூ. 15ம் சேர்த்து மாதத்துக்கு ரூ. 3,015வழங்கப்படும்.
அதே போல மறைந்த 3 விடுதலைப் போராட்ட வீரர்களின் மனைவியருக்கும் உதவித் தொகைவழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500ம், கூடவே ரூ. 15 மருத்துவப் படியாகவும்வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கலாமுக்கு ஜெ. வாழ்த்து:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.
ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு நாளை பிறந்த நாள். அதை பள்ளி மாணவ, மாணவியருடன் எளிமையாகக்கொண்டாடத் திட்டமிட்டுள்ளார்.
இந் நிலையில் கலாமுக்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்,
தங்களுக்கு எனது இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இன்னும் பலசாதனைகள் புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications