தமிழக கிராமங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டம்
சென்னை:
ரூ.10.37 கோடி மதிப்பிலான தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சிகளை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக 1,113 கிராம ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 29 மாவட்ட ஊராட்சி அலுவலகங்கள்மற்றும் ஊரக வளர்ச்சி இயக்ககம் ஆகியவற்றுக்கு கம்ப்யூட்டர் வழங்கப்படும்.
இத் திட்டத்தின் முதல்படியாக ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், பரங்கிமலை ஊராட்சிஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலா பாஸ்கர் ஆகியோரிடம் கம்ப்யூட்டர்களை ஜெயலலிதாவழங்கினார்.
ஊராட்சி நிர்வாகம் பயன்படுத்திய நேரம் போக எஞ்சியிருக்கும் நேரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இந்தகம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்தக் கம்ப்யூட்டர்கள்மூலம் 1,113 ஊராட்சிகளிலும் இன்டர்நெட் மையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் பயன்படுத்திக் கொள்ள வெப் காமிராக்களை ஆண்டிப்பட்டி திம்மரசநாயக்கனூர்முல்லைவனம் சுய உதவிக்குழுத் தலைவி சுமதி, ஆண்டிப்பட்டி குன்னூர் வைகை அறிவொளி சுய உதவிக் குழுத்தலைவி லிங்கம்மாள் ஆகியோரிடம் ஜெயலலிதா வழங்கினார்.
கிராம சுகாதார இயக்கம், மேம்படுத்தப்பட்ட திடக் கழிவு மேலாண்மை, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களைபயன்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஊராட்சிகளில் விடியோகான்பரன்ஸிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கிராம நிர்வாகிகள் தங்களது குறைகளை அவர்களதுஇடத்திலிருந்தே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவிக்க முடியும்.
இத் திட்டத்தை தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஊராட்சி மன்றத் தலைவி முத்துமணியுடன் விடியோகான்ஃபரன்ஸிங் முறையில் ஜெயலலிதா உரையாடி தொடங்கி வைத்தார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications