பிற மொழி சினிமா: கர்நாடக தியேட்டர்கள் மூடல்
பெங்களூர்:
தமிழ் உள்பட பிறமொழி திரைப்படங்களை கர்நாடகத்தில் வெளியிட விதிக்கப்பட்டிருக்கும் தடையை விரைவில்முடிவுக்கு கொண்டு வருமாறு கர்நாடக முதல்வர் தரம் சிங்கிடம் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
கன்னடம் அல்லாத பிற மொழிப் புதுப் படங்களை 7 வாரங்கள் கழித்தே திரையிட வேண்டும் என்ற தடையை மீறிசில பெங்களூர் திரையரங்குகளில் புதிய படங்களை உரிமையாளர்கள் திரையிட்டனர். இதைத் தொடர்ந்து அந்ததிரையரங்குகள் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து இன்று கர்நாடகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பெங்களூரிலும்அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே தடையை மீறி பிற மொழிப் படங்களைத் திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் தரம்சிங் வீடு முன்பு நடிகர் ராஜ்குமார் தலைமையில் இன்று தர்ணா நடத்தகன்னட திரையுலகினர் முடிவு செய்திருந்தனர்.
இதையடுத்து கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், வினியோகஸ்தர்கள் உள்ளிட்டதிரையுலகைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் தரம்சிங். இந்தப்பேச்சுவார்த்தைக்குப் பின் நடிகர் அசோக் (இயக்குநர் பாலச்சந்தரின் பல தமிழ் படங்களில் நடித்தவர்)செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முதல்வருடனான பேச்சுவார்த்தையையடுத்து இன்றைய போராட்டம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும்திட்டமிட்டபடி பெல்லாரியில் தெலுங்குப் படங்களை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இந் நிலையில் மும்பை திரையுலகினரும், இந்திய வர்த்தக சபையைச் சேர்ந்தவர்களும் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்து இப் பிரச்சினை குறித்துப் பேசினர். இதையடுத்து மன்மோகன் சிங், முதல்வர் தரம்சிங்கைதொலைபேசியில் அழைத்து இப்பிரச்சினையில் சுமூக தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துமாறுஅறிவுறுத்தியுள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications