ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது: கருணாநிதி புதிய தகவல்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது வழங்கிய அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைப்பு அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐநா மன்றம் தன்னைக் கெளரவிக்கிறது என்று பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைசெய்தியாக்கினார்கள். விசாரித்த போது அது ஐநா சபையல்ல, வெத்து வேட்டு என்பது தெரிய வந்தது.
சென்னை சமூக நீதி கோரும் வழக்கறிஞர் மன்றம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு விருதுவழங்கிய அனைத்துலக மனித உரிமைப் பாதுகாப்புக் குழு, ஐநா சபையின் அதிகாரப்பூர்வ அமைப்பு எனக்கூறப்படுவது உண்மையல்ல. ஐநா சபையின் ஆலோசனைக் குழுவில் 2,531 அரசு சாரா அமைப்புகள் அங்கீகாரம்பெற்றுள்ளன.
இதில், ஜெயலலிதாவுக்கு விருது வழங்கிய அமைப்பின் பெயர் இல்லை. விதிமுறைகளை மீறி ஐநா சபையால்அங்கீகரிக்கப்படாத ஒரு சிறிய அமைப்பினை சாக்காக வைத்து ஐநா சபையின் பெயரால் விருது வாங்குவதுபோன்ற பொய்த் தோற்றத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்கள்.
பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு தமிழக மக்களை தண்டச் சோற்றுத் தடி ராமன்கள் மாதிரி நடத்தியிருக்கிறார்ஜெயலலிதா. இது குறித்த உண்மைச் செய்திகளை பத்திரிக்கைகளும் மூடி மறைத்துவிட்டன. இந்தியாவிலேயே மிகநல்ல பெண்மணி இவர் தான் என்று ஐக்கிய நாட்டு சபை பாராட்டியதாக பத்திரிக்கைகள் செய்தி போட்டன.
இந்த விருதின் பெயரால் முதல்வரும் அமைச்சர்களும் தமிழக மக்களை ஏமாற்றினார்களா? அல்லது ஐநா சபையின்பெயரைச் சொல்லி உக்ரைன் நாட்டு அமைப்பினர் முதல்வரை ஏமாற்றினார்களா? என்ற உண்மையை தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தற்போது நாடாளுமன்ற பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுள்ள திமுகவைச் சேர்ந்த சண்முகசுந்தரமும்அங்கு விசாரித்த வகையில் ஜெயலலிதாவுக்கு விருது தந்த நிறுவனம், ஐ.நா. பட்டியலில் இடம் பெறவே இல்லைஎன்பதும் தெரியவந்தது.
ஜெயலலிதா ஆட்சியில் ஐநா சபையே இந்தப் பாடுபடுகிறது. யார் தான் சற்று துணிச்சலுடன், நடுநிலையுடன்சிந்தித்து மக்களுக்கு நல்லது எது கெட்டது எது என்பதை கூறப் போகிறார்களோ? மக்களும் எப்போது தான் அதைவிளங்கிக் கொள்ளப் போகிறார்களோ? என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications