நெடுஞ்சாலையில் சிதறிய கரன்சி நோட்டு துண்டுகள்!
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு- சேலம் நெடுஞ்சாலையில் லாரியிலிருந்து கிழிக்கப்பட்ட கரன்சி நோட்டுகளின் துகள்கள் விழுந்ததால்பொதுமக்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.
நெடுஞ்சாலையில் கள்ளிப்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்து கிழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் சிதறிவிழுந்தன. இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரூபாய்த் தாள்கள் கிழிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் பொது மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதுகுறித்து போலீஸுக்குத்தகவல் சென்றது. அவர்கள் வந்து விசாரித்துப் பார்த்தபோது, மல்லசத்திரம் பகுதியைச் சேர்ந்த சிவராமன் என்பவன் அரிசிஆலைக்கு அந்த லாரி சென்றது தெரியவந்தது.
சிவராமனின் உறவினர் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். பழைய ரூபாய் நோட்டுக்களை சிறியதுகள்களாக வெட்டி ரிசர்வ் வங்கி விற்பனை செய்வது வழக்கம்.
இந்த ரூபாய் நோட்டுத் துகள்களை தனது அரிசி ஆலைக்கு எரிபொருளாக பயன்படுத்தி வந்துள்ளார் சிவராமன்.
9 டன் ரூபாய்த் துகள்களை டன்னுக்கு ரூ. 1,200 என்ற கணக்கில் டெண்டரில் எடுத்தார் சிவராமன். இந்த ரூபாய்த் துகள்கள்லாரியில் கொண்டு வரப்பட்டபோது கீழே சிதறியது என்று விசாரணையில் தெரிய வந்தது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications