ஜெயலட்சுமி: தமிழக போலீசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
டெல்லி:
ஜெயலட்சுமி விவகாரத்தை சிபிஐ விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்துதமிழக காவல்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த வழக்கில் தமிழக போலீசார் நடத்திய விசாரணை வெறும் கண்துடைப்பு என்று கூறிய நீதிபதிகள், இந்தவிவகாரத்தை சிபிஐ விசாரிப்பதே சரி என்று தீர்ப்பளித்தனர்.
ஜெயலட்சுமி மீதான வழக்கை முதலில் தமிழக காவல் துறை விசாரித்தது. தமிழக போலீஸார் மீதான வழக்குகளைதமிழக போலீஸாரே விசாரணை செய்தால் நியாயமான நீதி கிடைக்காது. எனவே, இந்த வழக்குகளை சிபிஐவிசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று ஜெயலட்சுமி சார்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு மதுரை மற்றும் சென்னை உயர் நீதிமன்றக் கிளைகள் உத்தரவிட்டன.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தென் மண்டல ஐஜி மேல் முறையீட்டு மனு தாக்கல்செய்தார்.
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை ஏதும் விதிக்கமறுத்துவிட்டனர். இந்த மனு மீதான விசாரணை 15ம் தேதி (இன்று) நடக்கும் என்று அறிவித்தனர். இதைத்தொடர்ந்து சிபிஐ மிக வேகமாக களத்தில் இறங்கி விசாரணையை ஆரம்பித்துவிட்டது.
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.பி.சிங், நீதிபதி கிருஷ்ணா ஆகியோர் முன் இன்று தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக காவல்துறையினர் இந்த விஷயத்தில் முறையான விசாரணை நடத்தவே இல்லை. அவர்களதுவிசாரணையே வெறும் கண்துடைப்பு தான். இதனால் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்கிறோம்.ஜெயலட்சுமி விவகாரத்தை சிபிஐ விசாரிப்பதே சரி என்று தீர்ப்பளித்தனர்.
அப்போது இடைமறித்த தமிழக அரசின் வழக்கறிஞர், மாநில அரசின் அனுமதி பெறாமலேயே சிபிஐவிசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டியஅவசியம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை என கடுமையாகக் கூறினர்.
இதனால் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையைத் தடுக்கும் தமிழக அரசின் அனைத்து முயற்சிகளும்தோல்வியடைந்துள்ளன.
கற்புழிப்பு ஸ்பெஷலிஸ்ட் சஸ்பெண்ட்:
இதற்கிடையே ஜெயலட்சுமி வழக்கில் மேலும் ஒரு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு நெல்லை ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன், கமுதி சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோரைதமிழக அரசு தாற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.
அவர்களுடன் தற்போது நந்தம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் ஜான் ரோஸ் என்பரும் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2002ல் நெல்லையில் பணியாற்றியபோது ஜெயலட்சுமி மீது பொய்யாக விபச்சார வழக்கு பதிவுசெய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் காவல் நிலையத்தில் உள்ள செல்லில் வைத்தே ஜெயலட்சுமியை இவர் கற்பழித்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications