பெண் போலீஸ் தற்கொலை: போலீஸ்காரர் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

போலீஸ்காரரின் செஸ்க் டார்ச்சரை தாங்க முடியாத ஆயுதப்படை பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தீக்குளித்துதற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருச்சி ஜீயபுரம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் என்பவரது மகள் பார்வதி(32). இவர் கரூர் மாவட்டஆயுதப்படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் திடீரென விடுப்பு எடுத்துக் கொண்டுவீட்டுக்கு வந்தவர் திடீரனெ தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது தந்தை சிவசுப்ரமணியம் பலத்த காயங்களுடன் திருச்சி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தற்கொலை குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தியபோது, பார்வதியின் சாவுக்கு மதுரைலஞ்சஒழிப்புத் துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் அய்யர் என்பவர்தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அய்யர் மிரட்டல் விடுத்து வந்ததாகவும், செக்ஸ்ரீதியில் தொல்லைதந்து வந்ததாலும் தான் பார்வதி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இதற்கு குளித்தலைஊர்க்காவல் படையில் பணியாற்றும் செல்வம் என்பவரும் அய்யருக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

இந்தத் தகவல்களை பார்வதியின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அய்யர் மற்றும்செல்வத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அய்யரின் மிரட்டல் தாங்க முடியாமல் கடந்த செப்டம்பர் மாதம் வேலையை விட்டுவிட்டு பார்வதி வீட்டுக்குவந்துவிட்டார்.

இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. பணிக்கு வராமலும், எவ்வித தகவலும்கொடுக்காததால் அரசு விதிகளின்படி 21 நாட்களுக்கு பிறகு பார்வதியை விட்டோடி (deserter) என்று காவல்துறைஅறிவித்தது. இதையடுத்து சிவசுப்ரமணியம் தனது மகளை சமாதானப்படுத்தி, மருத்துவ சான்றிதழ் பெற்றுத் தந்துகடந்த 8ம் தேதி பணியில் சேர்த்துவிட்டுள்ளார்.

இதர துறைகளைக் காட்டிலும் காவல் துறையில் அதிக செக்ஸ் புகார்கள் வருவதையடுத்து, ஒவ்வொருமாவட்டத்திலும் ரூ.2 லட்சம் செலவில் டிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை பாலின நிகர்நிலை பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

மனதை ஒருமுகப்படுத்துதல், கோபத்தைக் கட்டுபடுத்துதல், அன்பான அணுகுமுறை, பெண் போலீஸாரிடம் நடந்துகொள்ளும் முறை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இருப்பினும் ஜெயலட்சுமி, பார்வதி போன்றவழக்குகள் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன.

போலீசாக திருந்தாவிட்டால்.. போலீசை திருத்தவே முடியாது.. என்பதே நிதர்சனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+