திருச்செந்தூர்- கொழும்பு இடையே கடலடி கேபிள்: மாறன்
சென்னை:
திருச்செந்தூர்- கொழும்பு இடையே கடலடி தொலைத் தொடர்பு கேபிள்கள் பதிக்கப்பட்டு வருவதாக மத்திய தொலைத் தொடர்புத்துறைஅமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.
இந்தியா-இலங்கை இடையே தொலைத் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து சென்னையில் நடந்த கருத்தரங்கில் அவர்கூறியதாவது:
திருச்செந்தூரில் இருந்து கொழும்பு வரை கடலுக்கடியில் பிராட்பேண்ட் கேபிள்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. ரூ. 80 கோடி செலவில் இந்த300 கி.மீ. தூர கேபிள்கள் பதிக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டில் இந்தப் பணிக் முடிவடைந்துவிடும். இதன் மூலம் இரு நாடுகளுக்கும்இடையிலான தொலைபேசிக் கட்டணம் பெருமளவில் குறையும்.
இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இந்திய தொலைத் தொடர்புத்துறையில் இப்போது 8.5 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.மாதந்தோறும் புதிதாக 20 லட்சம் தொலைபேசி இணைப்புகளை வழங்கி வருகிறோம். 5 ஆண்டுகளில் நாட்டில் தொலைபேசிஇணைப்புகளின் எண்ணிக்கை 20 கோடியாக உயரும் என்றார்.
முன்னதாக இந்தியா-இலங்கை இடையிலான பாரத் சஞ்சார் நிகம் நிறுவனத்தின் சாட்டிலைட் வீடியோ கான்பரன்சிங் வசதியை மாறன்துவக்கி வைத்து அந் நாட்டு தொலைத் தொடர்பு அமைச்சர் ஜெயரத்னேவுடன் பேசினார்.
-
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications