தீக்குளித்து இறந்த பெண் போலீஸ் கர்ப்பம் !
திருச்சி:
போலீஸ்காரரின் செக்ஸ் டார்ச்சரை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ஆயுதப்படை பெண் போலீஸ்கான்ஸ்டபிள், இரண்டு மாத கர்ப்பமாக இருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
கரூர் ஆயுதப் படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்த திருமணமாகாத பெண்ணான பார்வதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வரும் கான்ஸ்டபிளான அய்யர் என்பவர், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறுபார்வதியை வற்புறுத்தி வந்ததாகவும், இல்லாவிட்டால் கடத்தி சென்று கற்பழிப்பேன் என்று மிரட்டியதாகவும் பார்வதியின் பெற்றோர்குற்றம் சாட்டியிருந்தனர். இதனால் தான் தங்களுக்கு மகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினர்.
இந் நிலையில் பார்வதியின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது அவர் கர்ப்பமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அவரது வயிற்றில் 50 முதல் 60 நாட்கள் வரையிலான கரு இருப்பது தெரிய வந்தது.
இதனால் வழக்கின் விசாரணையே திசை மாறிப் போயுள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள அய்யர், பார்வதியை கட்டாயப்படுத்திஉடலுறவு கொண்டாரா அல்லது இருவருக்கும் தொடர்பு இருந்து வந்ததா என்றரீதியில் இப்போது விசாரணை நடந்து வருகிறது.
இந் நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்ட அய்யரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது,
மதுரை லஞ்ச ஒழிப்பு துறையில் நான் வேலை பார்த்துபோது ஒரு முறை சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அலுவலக வேலைவிஷயமாக சென்றிருந்தேன். அப்போது டிரான்ஸ்பர் கேட்டு பார்வதி டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது எங்கள்இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதன் பின்னர் இருவரும் தொலைபேசியில் அடிக்கடி பேசிக் கொள்வோம். அப்போது நான் திருமணமானவன் என்பது பார்வதிக்குத்தெரியாது. இதனால் என்னுடன் நெருங்க ஆரம்பித்தார். ஆனால், நான் திருமணமானவன் என்ற விவரம் பார்வதிக்குத் தெரியவந்தவுடன்விலகிச் செல்ல ஆரம்பித்தாள்.
இதையடுத்து அவளை மிரட்ட ஆரம்பித்தேன், நீ வேறு யாரையாவது திருமணம் செய்தால் அவரிடம் நம் இருவருக்கும் இருந்த உறவுகுறித்து சொல்வேன் என்று மிரட்டினேன் என்று கூறியுள்ளார் அய்யர்.
மேலும் கரூரில் உள்ள பெண் எஸ்.ஐ. ஒருவரின் உதவியோடு பார்வதியை அடிக்கடி சந்தித்தும் வந்திருக்கிறார் அய்யர். அப்போதுஇருவரும் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். அப்போது தான் திருமணமானவன் என்பதை பார்வதியிடம் அய்யர் மறைத்துள்ளார். இதனால்தான், தன்னை அய்யரிடம் பறி கொடுத்துவிட்டாலும் கூட அவரிடம் இருந்து விலக முயன்றுள்ளார் பார்வதி.
இதையடுத்து அய்யர் மிரட்ட ஆரம்பிக்க தற்கொலை செய்து கொண்டார் பார்வதி என்கின்றனர்.
அய்யரின் மனைவியும் போலீஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications