தோல்வி: மீண்டும் பாஜக தலைவராகிறார் அத்வானி
மும்பை & டெல்லி:
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்திலும் பா.ஜ.க. தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவராக அத்வானியே மீண்டும் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.
இந்தத் தோல்விகளைத் தொடர்ந்து பா.ஜ.கவின் தலைமையை மாற்ற வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத்நெருக்குதல் கொடுத்து வருகிறது. இதையடுத்து பா.ஜ.க. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வெங்கைய்யாநாயுடு முன் வந்துள்ளார்.
வி.எச்.பியின் தாக்குதல்:
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்திலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் பா.ஜ.கவின்தலைமையை மாற்ற வேண்டும் என அதன் தாய் அமைப்புகளில் ஒன்றான விஸ்வ இந்து பரிஷத் கோரிக்கைவிடுத்துள்ளது.
அதே போல ஆர்.எஸ்.எஸ்சும் பா.ஜ.க. தலைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
நாயுடுவின் ராஜினாமா முடிவு:
வி.எச்.பி. உள்ளிட்ட அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய பா.ஜ.க. தலைவர்வெங்கைய்யா நாயுடு முன் வந்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயையும் முன்னாள் துணைப் பிரதமர்அத்வானியையும் சந்தித்த நாயுடு தனது ராஜினாமா முடிவைத் தெரிவித்தார்.
ஆனால், அதை ஏற்க இரு தலைவர்களும் முதலில் மறுத்தனர். பின்னர் இந்த ராஜினாமா குறித்து கட்சியினருடன்விவாதிக்கலாம் என்று கூறிய அத்வானி, தானே மீண்டும் தலைவராகவும் முன் வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து கட்சியின் உயர் மட்டக் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டுள்ளது. அதில் நாயுடுவின் ராஜினாமாஏற்கப்படும் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து அத்வானியே தலைவராக பொறுப்பேற்பார்.
வாஜ்பாய், வெங்கையா நாயுடு, பிரமோத் மகாஜன் உள்ளிட்டவர்களை தலைமைப் பொறுப்பில் இருந்துஒதுக்கிவிட்டு மீண்டும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி போன்ற தலைவர்களை பா.ஜ.க. முன்நிறுத்த வேண்டும் என வி.எச்.பியும் ஆர்.எஸ்.எஸ்சும் பல மாதங்களாகவே கோரி வருகின்றன.
இப்போது மகாராஷ்டிரத்திலும் தோல்வி ஏற்பட்டுள்ளதால் தங்களது கோரிக்கையை அவை தீவிரமாக்கியுள்ளன.
தாக்கரேயின் தாக்குதல்:
இதற்கிடையே முஸ்லீம்களால் தான் மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க- சிவசேனை கூட்டணியின் தோல்வி அடைந்ததாகசிவசேனை தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
தனது கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவி பால் தாக்கரே எழுதியிருப்பதாவது:
முஸ்லீம்களின் ஓட்டு வங்கியாலும் மும்பைக்குள் ஊடுருவி வரும் பிற மாநிலத்தவர்களாலும் தான் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஓட்டு வங்கி அரசியல் நடத்தி வரும் காங்கிரஸ்,நாட்டின் நலனைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.
அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ள முஸ்லீம்களின் ஓட்டில் வங்கதேசத்தில் இருந்து நாட்டுக்குள் ஊடுருவியமுஸ்லீம்களின் ஓட்டும் அடங்கும்.
மத்தியில் வலுவில்லாத ஒரு அரசு ஆட்சியில் இருக்கும் சூழலில் நாடு முழுவதுமே இஸ்லாமிய அடிப்படைவாதம்பரவி, நாட்டுக்கே பெரும் கேடு விளையப் போகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சோனியா காந்தி தனது இருகுழந்தைகளையும் கூட்டிக் கொண்டு இத்தாலிக்கு ஓடிப் போய்விடுவார் என்று கூறியுள்ளார் தாக்கரே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications