டிரா ஆனது 2வது டெஸ்ட்; ரசிகர்கள் ஏமாற்றம்
சென்னை:
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மழை காரணமாகடிரா ஆனது.
இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் கடந்த14ம் தேதி 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
முதல் நாளிலிருந்தே விறுவிறுப்பாக நடந்த போட்டி நேற்று கிளைமாக்ஸை எட்டியது. இந்திய அணி 210 ரன்கள்எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இன்று 5வது நாள் ஆட்டம் நடக்கவிருந்தது. ஆனால் நேற்று இரவு முதல்சென்னை நகரில் மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவியது.
இன்று காலை லேசாக மழை நின்றது. இதனால் ஆட்டம் தொடங்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால்மழை தொடர்ந்து பெய்ய ஆரம்பித்ததால் ஆட்டத்தை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை குறையத்தொடங்கியது.
இன்று பிற்பகல் வரை மழை நிற்காததால், ஆட்டத்தைக் கைவிட நடுவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்துஇப்போட்டி எத்தரப்புக்கும் வெற்றியின்றி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த நிலையில் மழை வந்து ஆட்டத்தைக்கெடுத்ததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்குத் திரும்பினர்.
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் சச்சின்டெண்டுல்கர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications