ஜெ. அழைக்கிறார்: 50 கோரிக்கைகள் தயார்
சென்னை:
எஸ்மா, டெஸ்மா சட்டங்களை ரத்து செய்வது, பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்குவது உள்ளிட்ட 50கோரிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும்போது வலியுறுத்தப் போவதாக அரசு ஊழியர் சங்கப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இழந்த சலுகைகள் அனைத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந் நிலையில் அரசு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
நாளையும் அமைச்சர்கள் குழுவிடனும், நாளை மறுநாள் ஜெயலலிதாவுடனும் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கானஅழைப்பிதழ்கள் இன்று அனுப்பப்படுகின்றன.
இந்த பேச்சுவார்த்தைக்கு பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன. தலைமைச் செயலகஅரசு ஊழியர்கள் சங்க செயலாளர் அசோகன் இது குறித்து கூறுகையில்,
முதல்வரின் இந்த முடிவை வரவேற்கிறோம். பேச்சுவார்த்தையின்போது, அரசு ஊழியர்களை பாதிக்கும் எஸ்மா,டெஸ்மா சட்டங்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்; சுவாமிநாதன் கமிட்டி தெரிவித்த பரிந்துரையைஏற்கக்கூடாது;
வேலை நிறுத்தம் நடை பெற்ற காலத்தை முழுமையான பணிக்காலமாக கணக்கிட வேண்டும்; பறிக்கப்பட்டசலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்துவோம் என்று கூறினார்.
என்.ஜி.ஓ. சங்க தலைவர் சூரியமூர்த்தி பேசுகையில்,-
முதல்வரின் அழைப்பு காரணமாக அரசு ஊழியர்கள் மத்தியில் இருந்த மன இறுக்கம் குறைந்துள்ளது.பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு வழங்கி உள்ளதை போல் மாநில அரசு தனது ஊழியர்களுக்கு 9 சதவீதஅகவிலைப்படி வழங்க வேண்டும்; சரண் விடுப்பு, சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளஉயர்வு வழங்க வேண்டும்;
எஸ்மா, டெஸ்மா சட்டத்தை வாபஸ் பெற்று, அரசு ஊழியர் சங்கங்களுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்க வேண்டும்;பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப்பணியாளர்கள், மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கவேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்துவோம்.
கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் நிறை வேற்றி தருவார் என்று நம்புகிறேன் என கூறினார்.
அரசு ஊழியர் சங்க தலைவர் ஸ்ரீதர் பேசுகையில்,
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி மாவட்ட வாரியாக மாநாடுகள் நடத்தி வேண்டுகோள் விடுத்தோம்.இப்போது முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை வரவேற்கிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்என நம்புவதாகக் கூறினார்.
மொத்தமாக அனைத்து ஊழியர் சங்கங்களும் சேர்ந்து 50 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை ஜெயலலிதாவிடம்சமர்பிக்க உள்ளனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications