சபரிமலை: பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்
சபரிமலை:
சபரிமலை சீசனையொட்டி அங்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து தர கேரள அரசு நடவடிக்கைமேற்கொண்டு வருகிறது.
சபரிமலை வழிபாடு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் தொடங்கி மகர விளக்கு பூஜையுடன்முடிவடையும்.
சபரிமலைக் கோயிலில் இந்த ஆண்டுக்கான மேல் சாந்திகளாக முரளிதரன் நம்பூதிரி (39) ராஜகவ் நம்பூதிரி (37)ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஓராண்டு இப் பதவிகளை வகிப்பார்கள். இவர்கள் இருவரும்அடுத்த மாதம் 16ம் தேதி மேல் சாந்தியாக பதவி ஏற்று கொள்கின்றனர்.
இந்த ஆண்டு சபரிமலை சீசன் விரைவில் தொடங்கவிருப்பதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படைவசதிகளை செய்து கொடுப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கேரள அமைச்சர்வேணுகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:
மண்டலம், மகர விளக்கு பூஜையின் போது கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்களுக்கு வசதியாகமரக்கோட்டம் முதல் சரம் குத்தி வரையில் புதிய நடைபாதை அமைக்கப்படுகிறது.
இதற்காக வனத்துறைக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தர வேண்டும் என்று முதல்வர் உம்மன்சாண்டியும், நானும் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் வனத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்.
அய்யப்பனை தரிசனம் செய்ய மலைப்பாதையில் ஏறி வரும் பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதியாக மலைப்பாதையின்இருபுறமும் இருக்கைகள் போடப்படும். மரக்கோட்டம் முதல் வளையநாடப் பந்தல் வரையில் இந்த இருக்கை வசதிஏற்படுத்தப்படும்.
இந்த ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக உம்மன் சாண்டி மற்றும் 7 அமைச்சர்கள் வருகிற 29ம் தேதிஎருமேலி, பம்பன் ஆகிய இடங்களுக்கு வருகிறார்கள். அப்போது வனத்துறை, குடிநீர், மின்சாரம், சிவில் சப்ளை,சுகாதாரம், போக்குவரத்து ஆகிய துறைகள் கூட்டாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துஆலோசிக்கப்படும் என்று கூறினார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications