வட கிழக்கு பருவ மழை ஆரம்பம்: 19 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கிவிட்டது, இதனால் மாநிலம் முழுவதுமே நேற்று முதல் கன மழைபெய்து வருகிறது. இடி தாக்கி இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர்.
இது குறித்து நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரி ரவிக்குமார் கூறுகையில்,
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும் மழைதொடரும். அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நல்ல மழையும், மற்ற பகுதிகளில்சுமாரான மழையும் இருக்கும்.
சென்னையில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 2 நாட்கள் நீடிக்கும். இதுதவிரவிழுப்புரம், காஞ்சிபுரம், நாகப்பட்டனம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் தொடர்ந்து மழைபெய்யும் என்றார்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல சாலைகள்பெயர்ந்து போய் சேறு மயமாகியுள்ளது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடலில்அலைகள் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழைக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆகஉயர்ந்துள்ளது.
இடி தாக்கி 19 பேர் பலி:
இதற்கிடையே தமிழகத்தில் இடி, மின்னல் தாக்கி 19 பேர் பலியாகியுள்ளனர்.
கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, மதுரை, நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னைஆகிய மாவட்டங்களிலும் கன மழையுடன் இடி தாக்கியதில் 14 பேர் இறந்துள்ளனர்.
திருச்சியில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கணவனும், மனைவியும் இடி தாக்கி பரிதாபமாக இறந்தனர்.விழுப்புரத்தில், கோலியனூர் அருகே மின்னல் தாக்கியதில் பவானி, செல்வி, விஜயா ஆகியோர் பரிதாபமாகஇறந்தனர்.
நிரம்பும் மேட்டூர் அணை:
மழை காரணமாக மேட்டூர் அணையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு விநாடிக்கு 39,000 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 86 அடியாக உள்ளது.
ஓகேனகலில் வெள்ளம்:
இதேபோல, கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருவதால் கபினி அணையிலிருந்து அதிக அளவில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், ஓகனேக்கல் அருவியில் வெள்ளம் கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு அருகே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெ. நிழ்ச்சிகள் திடீர் ரத்து:
இதற்கிடையே சென்னையில் நாளை நடைபெறுவதாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டு நிகழ்ச்சிகள்ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கான காரணத்தை தமிழக அரசு தெரிவிக்கவில்லை. இருப்பினும் சென்னையில் பெய்து வரும் கன மழைகாரணமாகவே நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மெரீனா கடற்கரையில் ரூ. 50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள மாநகராட்சி நீச்சல் குளம்,கொருக்குப்பேட்டை குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை ஜெயலலிதா நாளை திறந்துவைப்பதாக இருந்தது.
இரு நிகழ்ச்சிகளும் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications