இந்துஸ்தான் புகைப்பட நிறுவனத்தை மூட கட்சிகள் எதிர்ப்பு
சென்னை:
உதகமண்டலத்தில் உள்ள இந்துஸ்தான் புகைப்படச் சுருள் தயாரிப்பு நிறுவனத்தை மூட மத்திய அரசு முடிவுசெய்துள்ளதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் அதைமூடி விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தை மூடக் கூடாது. இந்தப் பிரச்சினையில் தலையிட்டு அங்குபணியாற்றும் 12,000 ஊழியர்களின் வாழ்க்கையைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நல்லகண்ணு இதுகுறித்து கூறுகையில், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்நிறுவனத்தை மூட முயற்சிப்பது தவறான முடிவு. அதற்குப் பதிலாக அந்த நிறுவனத்திற்கு புத்துயிர் ஊட்ட மத்தியஅரசு முன்வர வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜனும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். மன்மோகன்சிங்குக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், எக்ஸ் ரே தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஒரே பொதுத்துறை நிறுவனம்இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் மட்டுமே. எனவே அந்த நிறுவனத்தை மூடுவதற்குப் பதில் புத்துயிர்ஊட்ட அரசு முன்வர வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதற்கிடையே, இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன ஊழியர்கள், தொழிற்சாலை முன் காலவரையற்றஉண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications