அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் குறித்து அரசு ஊழியர் சங்கப்பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், பொன்னையன் மற்றும் அரசு அதிகாரிகள் இன்று பேச்சுநடத்தினர்.

அகவிலைப்படி உயர்வு, சரண் விடுப்பு, போனஸ், சம்பள உயர்வு, டெஸ்மா, எஸ்மா சட்டங்களை திரும்பப்பெறுவது, பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்குவது உள்ளிட்ட 50 கோரிக்கைகளை ஊழியர் சங்கப்பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் 31 அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தலைமைச் செயலகத்தில்காலையில் தொடங்கிய பேச்சு மாலை வரை நடந்தது.

தலைமைச் செயலக மாநாட்டு அரங்கில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் அரசின் சார்பில் பொதுப்பணித்துறைஅமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நிதியமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் மற்றும்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடந்தாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றையபேச்சுவார்த்தைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் அமைச்சர்கள், அதிகாரிகள் விளக்குவர்.

இதன் பின்னர் நாளை அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஜெயலலிதா நேரடியாக நடத்தவுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+