ஜெயலட்சுமி: சிபிஐ மாராதான் விசாரணை

Subscribe to Oneindia Tamil

மதுரை & சிவகாசி:

Jayalakshmiஜெயலட்சுமியிடம் சிபிஐ மாராதான் விசாரணை நடத்தி வருகிறது. இன்று 7வது நாளாக அவரிடம் விசாரணைதொடர்ந்தது.

ஜெயலட்சுமியிடம் முழுமையாக விசாரணை நடந்து முடிந்த பின்னரே அவர் குற்றம் சாட்டியுள்ள காவல்துறைஅதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இளங்கோவன் காவல் நீட்டிப்பு:

-இந் நிலையில் ஜெயலட்சுமியின் குடும்பத்தினரைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்இளங்கோவனின் காவல் அடுத்த மாதம் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜெயலட்சுமியின் குடும்பத்தை கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த மதுரை திடீர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்இளங்கோவன் கடந்த 27ம் தேதி மதுரை 5-வது குற்றவியல் நடுவர் மன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்துஅவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். நேற்று இளங்கோவனின் காவல் முடிவடைந்தது.

அதையடுத்து வரநேற்று மீண்டும் சிவகாசி கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது அவரது காவலை நீதிபதி ஆபிரகாம் லிங்கன் அடுத்த மாதம் 1ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+