752 வீரர்களுக்கும் ரூ. 3 லட்சம், வீடு, பதவி உயர்வு!
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த தமிழக அதிரடிப்படையைச் சேர்ந்த 752போலீசாருக்கும் தலா ரூ. 3 லட்சம் பரிசும், விரும்பும் இடத்தில் ஒரு வீட்டு மனை மற்றும் பதவி உயர்வும்வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதையடுத்து இன்று செய்தியாளர்களை ஜெயலலிதாசந்தித்தார். அவர் கூறியதாவது:
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் மிகவும் பூரிப்பும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.
நான் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றபிறகு எனக்கு கிடைத்திருக்கும் மிக மகிழ்ச்சியான செய்தி இதுதான். இந்தஅருமையான நடவடிக்கையில் ஈடுபட்ட கூடுதல் டிஜிபி விஜயக்குமார் முதல் அதிரடிப்படையின் சமையல்காரர்வரை அனைவரையும் நான் பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
குடும்பம், மனைவி, மக்களைப் பிரிந்து அதிரடிப்படையினர் ஆற்றியுள்ள பணி சாதாரனமானதல்ல. இதன் மூலம்இந்தியாவிலேயே மிகச் சிறந்தது தமிழக காவல்துறை தான் என்ற எனது அசைக்க முடியாத உண்மை மீண்டும்நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட 752 அதிரடிப்படையினருக்கும் சில பரிசுகளை வழங்க முடிவு செய்துள்ளேன்.
அதன்படி 752 பேருக்கும் தற்போது வகிக்கும் பதவியிலிருந்து, அடுத்த பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது.மேலும், அவர்கள் விரும்பும் இடத்தில் இலவச வீட்டு மனை தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும். அத்தோடு752 பேருக்கும் தலா ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.
அதிரடிப் படையினரின் தியாக மனப்பான்மையை, கடமை உணர்வைப் பாராட்டி இந்தப் பரிசுகள் தமிழக அரசின்சார்பில் வழங்கப்படுகிறது.
வீரப்பன் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. வீரப்பன் வேட்டையில் முன்புஈடுபட்டிருந்த டிஜிபிக்கள் தேவாரம், நடராஜ் (தற்போதைய சென்னை கமிஷ்னர்) ஆகியோருக்கும் எனதுபாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்போது நான் உங்களை (பத்திரிக்கையாளர்களை) சந்தித்தாலும் வீரப்பனை எப்போது பிடிப்பீர்கள் என்றுகேலியும் கிண்டலும் கலந்த குரலில் கேள்வி கேட்பீர்களே. பிடித்துக் காட்டிவிட்டோம், பார்த்தீர்களா. இப்போதுஎன்ன கேட்க போகிறீர்கள்.
இதே மாதிரி தான் வீராணத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வருவோம் என்றபோது அது முடியவே முடியாது,வீணான திட்டம் என்றார்கள். இப்போது தண்ணீர் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது என்றார் என்றார்ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் அறிவிப்பையடுத்து கூடுதல் டிஜிபியாக இருந்து வரும் விஜயக்குமார் டிஜிபியாக பதவி உயர்வுபெறுகிறார்.












Click it and Unblock the Notifications