• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீரப்பனை கொன்ற ஆபரேஷன் குக்கூன்

By Super
|

தர்மபுரி:

Veerappanசந்தனக் கடத்தல் வீரப்பனும் அவனது கூட்டாளிகள் 3 பேரும் தமிழக அதிரடிப் படையினரால் நேற்று நள்ளிரவில்சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கெளடா, சேதுமணி ஆகிய நால்வரும் தர்மபுரி மாவட்டம் ஓகேனகல்அருகே பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்து பாடி வனப் பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ் வேனில் வைத்துகொல்லப்பட்டனர்.

உளவாளிகள், போலீஸ் நெட்வோர்க், ஊருருவல், போலி ஆம்புலன்ஸ் என ஒரு மெகா திகில் சீரியலுக்குஇணையான பல ஆச்சரியங்களுடன் நடத்தப்பட்டுள்ளது இந்த அதிரடி எண்கெளன்டர். வீரப்பனின் கதையைமுடிக்க அதிரடிப்படை போட்ட இந்த பகீர் திட்டத்தின் பெயர் Operation cocoon (ஆபரேசன் கூட்டுப்புழு)

இத் திட்டம் எப்படி நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் கூறியதாவது:

வீரப்பன் வழக்கமாக உலவும் வனப் பகுதிகளை விட்டு விட்டு அவனுக்கு அதிக ரிஸ்க் உள்ள, அவன் அதிகம்தலைகாட்டாத கிழக்குப் பகுதி காடுகள் மற்றும் மேற்குப் பகுதிகளில் நாங்கள் தீவிரமாக செயல்படத்தொடங்கினோம்.

Veerappan Associates Sethukkuli govindan,Chandra gowda and Sethu maniஇந்தப் பகுதிகளுக்கு அவன் அவ்வளவாக வருவதில்லை என்பதைப் பயன்படுத்தி அங்குள்ள லோக்கல்ஆசாமிகளுடன் கலந்தோம். அவர்களைக் கொண்ட ஒரு பெரிய உளவு நெட்வோர்க்கை உருவாக்கினோம்.வீரப்பன் நடமாடும் கிராமங்களுக்குள்ளும் அதிக ரிஸ்க் எடுத்து அதிரடிப்படையினர் மாறு வேடங்களில்ஊடுருவினர்.

தோட்ட வேலை பார்ப்பவர்களாக, கூலிகளாக அவர்கள் கிராமங்களுக்குள் கலந்தனர். உளவு நெட்வோர்க்குடன்இணைந்து இவர்கள் வீரப்பன் நடமாட்டம் குறித்த தகவல்களை சேகரித்தனர்.

குறிப்பாக முருகேசன் என்ற அதிரடிப்படை வீரர் மிகச் சிறப்பாக செயல்பட்டு, வீரப்பனுக்கு நேரடியாக உதவும்ஆட்களுடன் பழகி, அவர்களுக்கு நெருக்கமானார். அவர்கள் மூலமாக நிறைய தகவல்களை எங்களுக்குத் திரட்டித்தந்தார்.

Vijayakumarமேலும் தமிழகம், கொள்ளேகால், பெங்களூரில் உள்ள சிறைகளில் உள்ள சிலர் மூலமாகவும் வீரப்பனுக்குநெருக்கமானவர்கள் குறித்த தகவல்கள் கிடைத்தன. (தமிழக சிறைகளில் தமிழ் தேசிய இயக்கத் தீவிரவாதிகளும்,கர்நாடகத்தில் வீரப்பனுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டவர்களும், கொள்ளேகாலில் வீரப்பனின்ஆதரவாளர்கள் பலரும் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது). இந்த விஷயத்தில் நான் அதிக விவரம் தரமுடியாது.

வீரப்பனுக்கு கண்ணில் பிரச்சனை இருப்பது எங்கள் உளவு நெட்வோர்க்குக்குத் தெரியவந்தது. இதையடுத்துஅவனுக்கு சிகிச்சை தரலாம் என்று சொல்லி அவனை காட்டை விட்டு வெளியே கொண்டு வர முயன்றோம்.

அவனது ஆதரவு கும்பலை வைத்தே அவனை அஞ்செட்டி, பண்ணாரி போன்ற இடங்களுக்கு சிகிச்சைக்காககொண்டு வர முயன்றோம். ஆனால், அந்தத் திட்டங்கள் தொடர்ந்து தோற்றன.

ஆனாலும் எங்கள் முயற்சி தொடர்ந்தது. 1 வாரத்திற்கு முன் மேற்குப் பகுதி காட்டுக்கு வீரப்பனை வரவைக்கமுயற்சித்தோம். ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. ஆனாலும் நாங்கள் துவளவில்லை.

தொடர்ந்து முயற்சி செய்து பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு அருகே உள்ள பாடி வனக் கிராமத்திற்கு வீரப்பனைவரவைக்க முயற்சி செய்தோம். இந்த முறை எங்கள் முயற்சிக்குப் பலன் கிடைத்து. வீரப்பன் வெளியே வரசம்மதித்தவுடன் அதிரடிப்படைக்குச் சொந்தமான சாதாரண டெம்போ டிராவலர் வேனை அவசரத்துக்குஆம்புலன்ஸ் போல மாற்றி, உள்ளே படுக்கை, ஆக்சிஜன் சிலிண்டெர்கள், குளுக்கோஸ் பாட்டில்கள்,ஸ்டெச்சருடன் அனுப்பினோம்.

The STF COP, who drove the ambulanceஅதை ஓட்டிச் சென்றது அதிரடிப்படையைச் சேர்ந்த வீரரான சரவணன். எங்கள் உளவு நெட்வோர்க் வீரப்பனைஅந்த வேனில் ஏற்றிவிட்டது. போலி ஆம்புலன்ஸ் என்ற எந்த சந்தகமும் வராதபடி நடந்து கொண்டார் வீரர்சரவணன். வீரப்பனையும், கும்பலையும் காட்டுக்கு வெளியே வேனில் கொண்டு வந்தார். இதற்காக அவர் எடுத்தரிஸ்க் மிக அபாயகரமானது.

வேன் வரும் பாடி பகுதியில் அதிரடிப் படையைச் சேர்ந்த காவலர்கள், எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன்தலைமையில் இரவு 10.20 மணிக்கெல்லாம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர்.

வீரப்பன் வந்த ஆம்புலன்ஸ் வேன் இரவு 10.40 மணிக்கு அப்பகுதிக்கு வந்தது. இதையடுத்த போலீஸார்ஆம்புலன்ஸை சுற்றி வளைத்து வீரப்பன் கும்பலை சரணடைய உத்தரவிட்டனர். ஆனால் அவன் மறுத்து விட்டுதுப்பாக்கியால் சுட ஆரம்பித்தான்.

மீண்டும் ஒரு முறை சரண் அடையுமாறு வீரப்பன் கும்பலுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவன் மறுத்துவிட்டான். இதையடுத்து 10.50 மணிக்கு தமிழக அதிரடிப்படை வீரர்கள், ரெமிங்டன் பம்ப் கன் எனப்படும்சரமாரியாக புல்லட்டுகளை வெளியேற்றும் வகையிலான துப்பாக்கிகளால் சுட்டனர்.

11.10 வரை துப்பாக்கி சூடு நீடித்தது. இதில் வீரப்பனும், அவனது கும்பலும் உயிரிழந்தனர். வீரப்பன் வழக்கமானஉடையில் இல்லாமல் வெள்ளை சட்டை, பேண்ட் அணிந்திருந்தான். மீசையையும் டிரிம் செய்து அடையாளம்மாறியிருந்தான்.

The Ambulance in which Veerappan traveledவேனை ஓட்டி வந்த சரவணன் அதை எங்கள் படையினர் அருகே கொண்டு வந்து நிறுத்திவிட்டு, உடனேவெளியில் குதித்துவிட்டார். இதையடுத்து சுற்றி வழைத்தோம்.

முழுக்க முழுக்க தமிழக அதிரடிப் படையின் மிகச் சிறந்த, துல்லியமான, புத்திசாலித்தனமான உளவுநடவடிக்கைகள் காரணமாக வீரப்பனை இந்த முறை எங்களால் எளிதாக வளைக்க முடிந்தது. அவனை சுட்டுக்கொல்வது எங்களது நோக்கமல்ல, சரணடைய வைக்கத்தான் முயன்றோம். ஆனால் முடியாததால் சுட்டுக்கொன்றோம்.

மேலும், வீரப்பன் கும்பலில் 4 பேர் மட்டுமே இருந்தனர். அவர்களுக்குள் சில பிரச்சினைகளும் இருந்ததும்எங்களுக்குத் தெரியவந்தது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சேதுமணி என்பவர் வீரப்பனை விட்டுப்பிரியும் மனநலையில் இருந்தார்.

சந்திரே கெளடாவும் அவரது பெற்றோருடன் சேரும் மன நிலையில் இருந்தார்.

சேத்துக்குளி கோவிந்தனுக்கு வீரப்பனுக்குப் பதில் தானே தலைவனாகும் ஆசை வந்து விட்டது. இந்த பிளவைமையமாக வைத்துத் தான் எங்களது உளவு நெட்வோர்க் வெற்றிகரமாக செயல்பட்டது.

Veerappanமேலும், தென் ஆற்காட்டைச் சேர்ந்த சில தமிழ்த் தீவிரவாத அமைப்புகளுடன் வீரப்பன் தொடர்பு கொண்டதும்எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.

எங்களது இந்த நடவடிக்கை 4 வாரங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது. மிகச் சரியான, ரகசியமான முறையில்செயல்பட்டு வெற்றிபெற்றோம். இந்த நடவடிக்கையில் எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் மிக முக்கியப் பங்குவகித்தார்.

அத்தோடு காவலர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் வெள்ளைத்துரை, எனது கார் டிரைவர் சரவணன், சப்இன்ஸ்பெக்டர்கள் பிரசன்னா, சந்திரமோகன், ராஜேஷ் கண்ணா, டி.எஸ்.பி. உசேன், டி.எஸ்.பி. திருநாவுக்கரசு,இன்ஸ்பெக்டர் ராஜராஜன், சம்பத் உள்பட பலரும் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

இவர்களில் டி.எஸ்.பி. உசேனின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியவை. அதேபோல, டி.எஸ்.பி.திருநாவுக்கரசு பல நாட்கள் இரவுகளில் காடுகளில் தங்கி வீரப்பன் கும்பல் குறித்து தகவல் சேகத்துள்ளார்.அவர்களுக்கு நான் வீர சல்யூட் செய்ய கடமைப்பட்டவன்.

அத்தோடு அதிரடிப்படையின் சமையல்காரர் முதல் எஸ்.பி. வரையிலான அனைவரையும் நான் வணங்குகிறேன்.அனைவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர், அவர்கள்தான் இந்த நடவடிக்கையின் ஹீரோக்கள். அனைவருக்கும்எனது சல்யூட்.

அத்தோடு வீரப்பன் வேட்டையை முன்னின்று நடத்தி இதற்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத்த எனது குருநாதர்வால்டேர் தேவாரம், கர்நாடக முன்னாள் அதிரடிப்படைத் தலைவர் சங்கர் பித்ரி, சஞ்சய் அரோரா உள்ளிட்டமுன்னோடிகள் அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

Veerappanஇந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் அனைவருக்கும் முதல்வர் ஜெயலலிதா பாராட்டுக்களைத்தெவித்துள்ளார். படையினரை அவர் கவனித்துக் கொள்வார் என்று நம்புகிறேன் என்றார் விஜயக்குமார்உணர்ச்சிவசப்பட்டவராய்.

இப் பேட்டியின் போது கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி, வீரப்பனை சுட்டுக் கொன்றதமிழக அதிரடிப்படை காவல்துறைக் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

தனது கண் புரைக்காக செல்லியம்பாடி என்ற இடத்தில் உள்ள அரசு தொழு நோய் மருத்துவமனைக்குச் சென்று 2தடவை ரகசியமாய் சிகிச்சை பெற்றுள்ளான் வீரப்பன். இந்த விவரத்தைத் திரட்டிய அதிரடிப்படை அவனது கண்சிகிச்சையை மையமாக வைத்தே ஆப்ரேசன் குக்கூனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

சட்ட விவகாரங்களுக்காக, கொல்லப்பட்டது வீரப்பன் தான் என்பதை அவனது கைவிரல் ரேகை மூலமாக உறுதிசெய்துள்ளது போலீஸ். 20 வருடங்களுக்கு முன் கர்நாடக போலீசில் ஒருமுறை வீரப்பன் சிக்கியபோதுஎடுக்கப்பட்ட ரேகை அது.

இதில் குழப்பத்தைத் தவிர்க்க டி.என்.ஏ. சோதனை நடத்திவிடுவது நல்லது என பிரபல தடயவியல் நிபுணக் டாக்டர்சந்திரசேகரன் கூறியுள்ளார். வீரப்பனின் உடல் செல்களை எடுத்து, அவனது குடும்பத்தினரின் செல்களுடன்ஒப்பிட்டால் விஷயம் உறுதியாகிவிடும் என்கிறார். Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

சென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2019
தயாநிதி மாறன் திமுக வென்றவர் 4,48,911 57% 3,01,520
சாம் பால் பாமக தோற்றவர் 1,47,391 19% 3,01,520
2014
எஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841
தயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0
2009
தயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454
முகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0

 
 
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more