6 நகரங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம்
சென்னை:
தமிழகத்தில் சென்னை உள்பட 6 நகரங்களில் வாக்காளர் பட்டியலை முழுவதுமாக திருத்தியமைக்க தேர்தல்ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழக வாக்காளர்கள் பெரும்பாலோருக்கு ஓட்டளிக்கும் உரிமைமறுக்கப்பட்டது. பலருக்கு வாக்காளர் அடையாள அட்டை கையில் இருந்தும், பட்டியலில் பெயர் இல்லாததால்ஓட்டளிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலை சரி பார்க்கக் கோரி ஏராளமான புகார்கள் தேர்தல் ஆணையத்திற்குஅனுப்பப்பட்டது. இதுதொடர்பாக விசாரிக்க கேரள மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ்நியமிக்கப்பட்டார். அவரது விசாரணை முடிந்து அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய செயலாளர் ஆர்.கே.பிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில்சென்னை,மதுரை, கோவை, திருச்சி,சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளுக்குட்பட்ட மொத்தம் 33சட்டசபைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலை முழுவதுமாக சரிபார்க்க தமிழக அரசுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சரி பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆனால், சென்னை நகர தொகுதிக்குள் வரும் இரண்டு தொகுதிகளையும் சரிபார்க்கும் தொகுதிகளின் பட்டியலில் சேர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 201 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தி அமைக்கப்படும். வீடுகளின் கதவு எண் மாற்றம்,பழைய எண், புதிய எண் குழப்பம் போன்றவை இந்த சரிபார்த்தலில் கவனித்து திருத்தப்படும்.
இவை அனைத்தும் முடிந்த பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் தபால் அலுவலகங்களில் வைக்கப்படும். அதைப்பார்த்து விட்டு திருத்தம், சேர்த்தல், நீக்கல் போன்றவற்றை தபால் அலுவலகங்களில் விநயோகிக்கப்படும்விண்ணப்பங்கள் மூலம் வாக்காளர்கள் சேர்ப்பிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து வீடு வீடாகச் சென்று தபால் ஊழியர்கள் வாக்காளர்கள் கொடுத்த தகவல்களை சரி பார்ப்பர்.அதன் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications