இறக்குமதி பொருட்களுக்கு நுழைவு வரி விலக்கு
சென்னை:
வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதியாகும் பொருட்களுக்கு நுழைவு வரியில் விலக்குஅளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இந்தியா--ஆசிய நாடுகளின் வர்த்தக மாநாடு சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் இன்று நடந்தது. மாநாட்டைதொடங்கி வைத்து ஜெயலலிதா பேசியதாவது:-
தமிழ்நாட்டில் 1991 முதல் 1996 வரை பொருளாதார வளர்ச்சி நன்றாக இருந்தது. அதன் பிறகு பொருளாதாரவளர்ச்சியின் வேகம் குறைந்தது.
தமிழ்நாட்டிற்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், கலாச்சாரம் ஆகியன வளர்ச்சி காண வேண்டும்.கிராமப் பொருளாதாரத்தை பாதிக்காமல் வளர்ச்சி இருக்க வேண்டும்.
ஆசிய நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இடையே 1,300 கோடி டாலர் வர்த்தகம் நடந்து வருகிறது. இது போதாது.
எனக்கு இரண்டு கனவுகள் இருந்தன. அந்த 2 கனவும் அண்மையில் நிறைவேறியது. ஒன்று வீராணம் திட்டம்.அடுத்தது வீரப்பனைக் சுட்டுக் கொன்றது. இனி தமிழ்நாட்டை முதல் மாநிலம் ஆக்குவதுதான் எனது அடுத்த கனவு.
தமிழ்நாட்டில் விவசாயம் சார்ந்த தொழில்களிலும், உணவு பதப்படுத்தும் தொழிலிலும் முதலீடு செய்ய முன்வரவேண்டும். அந்நிய முதலீட்டை பெறுவதில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 2,621 வெளிநாட்டுநிறுவனங்கள் உள்ளன. ரூ.25,100 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு சட்டம்-, ஒழுங்கு நன்றாக உள்ளது. மனிதவளம் நிறைய உள்ளது. நீண்ட தூர கடற்கரை, 3 பெரியதுறைமுகங்கள், விமான போக்குவரத்து வசதி ஆகியன உள்ளன. மேலும் நவீன தொலை தொடர்பு வசதிகள்உள்ளது. தமிழ்நாட்டுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே கடலடி கேபிள் வசதி உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து ரூ.170 கோடிக்கு கணிணி மென் பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. டைசல் பார்க்120 கோடி டாலர் செலவில் தயாராகி விட்டது.
நிலக்கோட்டையிலும், சென்னையிலும் உலக தொழில் வளாகம் அமைக்கப்படும். சென்னை, தூத்துக்குடியில் சிறப்புபொருளாதார மண்டலம் அமைக்கப்படும். ஐரோப்பிய நாடுகளைவிட குறைந்த செலவில் தரமான மருத்துவ வசதிஇங்கு கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் பொருட்கள் தயாரிக்க நேரடியாக இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கு நுழைவு வரிவிலக்கு அளிக்கப்படும். அதேபோல தமிழ்நாட்டில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்லும்போதும் நுழைவு வரி விலக்கு அளிக்கப்படும் என்று கூறினார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications