அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்கிய ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil
Jayalalitha and govt. employees
சென்னை:

தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த காலத்திற்கு சம்பளம், ஆண்டுக்கு 7 நாள் சரண் விடுப்பு ஊதியம்,6 சதவீத அகவிலைப்படி உயர்வு, அரசு ஊழியர் சங்கங்களுக்கு மீண்டும் அங்கீகாரம் என அரசு ஊழியர்களுக்குபல்வேறு சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா வாரி வழங்கியுள்ளார்.

அதே நேரத்தில் எஸ்மா, டெஸ்மா சட்டங்களை நீக்க முடியாது என்று அறிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று முன்தினம் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம்,பொன்னையன் தலைமையிலான அரசுப் பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். இதைத் தொடர்ந்து முதல்வர்ஜெயலலிதாவுடன் அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர்.

தலைமைச் செயலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் அறையில் நடந்த பேச்சுவார்த்தையில் 37 சங்கங்களைச் சேர்ந்தபிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஜெயலலிதா சில அறிவிப்புகளை வெளியிட்டார். அவரது அறிவிப்பு விவரம்:

கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல் கணக்கிட்டு மாத அடிப்படைச் சம்பளத்துடன் சேர்த்து ஒரு தவணை 4 சதவீதஅகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். நிலுவைத் தொகை ரொக்கமாக அளிக்கப்படும்.

அடுத்த தவணையான 2 சதவீத அகவிலைப்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும். இதன் மூலம்மத்திய அரசு வழங்கியிருக்கும் அகவிலைப்படிக்கும், மாநில அரசின் அகவிலைப்படிக்கும் இடையே நிலவும்வித்தியாசம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 7 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். இது இம்மாதம் 20ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்த கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி அல்லது 2ம் தேதி முதல்4ம் தேதி வரையிலான காலத்தை சம்பளமில்லாத விடுப்பாக கருதப்படும். அதன் பின்னர் 24ம் தேதி வரையிலானகாலத்தை பணிக் காலமாக கருத நடவடிக்கை எடுக்கப்படும்.

அகவிலைப்பஐ உயர்வு, வேலை நிறுத்த காலத்திற்கான 20 நாள் சம்பளம் ஆகியவற்றை சேர்த்து அரசுஊழியர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 4,600ம், அதிக பட்சமாக ரூ.11,000ம் கிடைக்கும்.

வேலைநிறுத்த காலத்தின்போது அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 37 சங்கங்கள் மீண்டும் செயல்பட அனுமதியும்,அங்கீகாரமும் வழங்கப்படுகிறது.

இதுதவிர மதிய உணவுத் திட்ட பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆயாக்கள், சமையல்காரர்கள்உள்ளிட்ட இன்ன பிறரின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்குரிய அறிவிப்புகள் தனியேவெளியிடப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

அதே நேரத்தில் டெஸ்மா, எஸ்மா சட்டங்களை வாபஸ் பெற ஜெயலலிதா மறுத்துவிட்டார்.

கருணாநிதி தலைமையில் மாநாடு:

இந் நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் நிருபர்களிடம் பேசுகையில்,

டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்குவது, சத்துணவு ஊழியர்களுக்கு பென்ஷன், பணிக்கொடை உள்ளிட்டநிறைவேற்றப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் வருகிற 29 மற்றும் 30ம் தேதிகளில் திட்டமிட்டபடிமாநில மாநாடு நடைபெறும்.

அதில் திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் உள்ளிட்டதலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+