ஜப்பானில் பயங்கர சூறாவளி: 55 பேர் பலி
டோக்யோ:
ஜப்பானை பயங்கர சூறாவளி தாக்கியதில் 55 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் ஜப்பானைத்தாக்கிய மிக சக்தி வாயந்த சூறாவளி இதுவாகும்.
சூறாவளிக் காற்றுடன் மிக பலத்த மழையும் பெய்ததால் ஜப்பானின் தெற்கு, மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில்திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் 55 பேர் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். மேலும் 300க்கும்அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளத்தில் வீடுகள், சாலைகள், மரங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சேறு மயமாகக் கிடக்கும் பகுதிகளில்,சேற்றுக்குள் யாராவது சிக்கியிருக்கிறார்களா என தேடும் படலத்தில் ராணுவமும் மீட்புப் படையினரும்ஈடுபட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சூறாவளியால் சாலையை விட்டு தூக்கிவீசப்பட்டுள்ளன. பல இடங்களில் நிலச்சரியும் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில்மூழ்கியுள்ளன.












Click it and Unblock the Notifications