ஆஸி.க்கு எதிரான 3வது போட்டியில் சச்சின்
மும்பை:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின்டெண்டுல்கர் விளையாடுகிறார்.
இடது முழங்கை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டெண்டுல்கர், கடந்த மூன்று மாதங்களாக போட்டிகள்எதிலும் பங்கேற்கவில்லை. இந் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை மறுநாள் நாக்பூரில் தொடங்கும்3வது டெஸ்டில் விளையாடும் அளவுக்கு அவர் உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பதைப் பரிசோதிக்க இந்தியகிரிக்கெட் அணி மருத்துவர் ஆன்ட்ரூ லீபஸ், மும்பையின் பிரபல மருத்துவர் ஆனந்த் ஜோஷி ஆகியோரைகிரிக்கெட் வாரியம் நியமித்தது.
பாந்த்ரா பகுதியில் உள்ள அரங்கில் நடந்த உடல் தகுதிச் சோதனையில் சச்சின் கலந்து கொண்டார் சச்சின்.
இந்தச் சோதனைக்குப் பிறகு, 3வது போட்டியில் சச்சின் விளையாடலாம் என்று மருத்துவர்களஅ அறிக்கைஅளித்தனர். பின்னர் சச்சின் நிருபர்களிடம் பேசுகையில், நாக்பூர் போட்டியில் விளையாட முடியும் என்றுநம்பிக்கையுடன் இருந்தேன். அது வீண் போகவில்லை. அடுத்தப் போட்டியில் விளையாடப் போகிறேன் என்றநினைப்பே மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
சச்சினுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர் ஆனந்த் ஜோஷி அளித்த பேட்டியில், சச்சினை நாங்கள்தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவரது இடது முழங்கைக்கு முழுப் பலம் திரும்பி விட்டது. அதிக எடைக்கொண்ட வழக்கமான பேட்டை சச்சின் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை.
பிற்காலத்தில் சச்சினுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு இல்லை. சென்னை டெஸ்ட் போட்டியிலேயே சச்சின்விளையாடும் தகுதியுடன்தான் இருந்தார். அவரது உடல் நிலையை அறிவதற்காக நாங்கள்தான் அவரைக்கொஞ்சம் தாமதப்படுத்தினோம் என்று கூறினார்.
இந் நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், காயம் குணமடைந்து மும்பை வந்தார். அடுத்தமாதம் 3ம்தேதி மும்பையில் தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுகிறார். அவர் நிருபர்களிடம்பேசுகையில்,
நாக்பூர் டெஸ்டில் சச்சின் விளையாடப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் வருவது எங்களுக்கும்மகிழ்ச்சிதான். காரணம், சச்சின் பங்கேற்கும் இந்திய அணியை வீழ்த்துவதில்தான் எங்களுக்குத் திருப்தி என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications