தமிழுக்காக எதையும் இழக்கத் தயார்: திருமாவளவன்
சென்னை:
தமிழ் மற்றும் தமிழர் நலனைக் கருதியே பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து செயல்படுகிறேன். இந்தவிஷயத்தில் என்னையும் ராமதாஸையும் யாராலும் பிரிக்க முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்திருமாவளவன் கூறினார்.
தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், எழுத்தாளர் தியாகு, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசுகையில், தமிழைக் காக்கும் நோக்கில்தான் பாமகவுடன் இணைந்து,விடுதலைச் சிறுத்தைகள் செயல்படுகிறது. இந்தக் கூட்டணி அரசியல் அரங்கிலும் பெரிய மாற்றத்தைஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பாமகவுடன் இணைந்து செயல்படுவதால் எனக்கு அரசியல்ரீதியாக பெரும் பாதிப்பு தான் ஏற்படும் என்றுகூறப்படுவது குறித்து நான் கவலைப்படவில்லை. தமிழுக்காக எதையும் இழக்க நான் தயார்.
பாமகவின் அரசியல் குறித்து எனக்குக் கவலை இல்லை. ஆனால் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக விடுதலைச்சிறுத்தைகள் குரல் கொடுக்கும்போதெல்லாம் அதை ஆதரிப்பதாக பாமக உறுதியளித்துள்ளது.
தமிழ் மீதும், தமிழ்ச் சமுதாயம் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் கடும் தாக்குதல் நடத்தப்படும்போதெல்லாம்அதைக் கண்டும் காணாமலும் இருக்க முடியாது. அதைக் தட்டிக் கேட்டுத்தான் ஆக வேண்டும். அதைபிரிவினைவாதம் என்று விமர்சித்தால் அதுகுறித்து எனக்குக் கவலையில்லை.
இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தியதுபோல, தற்போது தமிழைக் காக்க போராட்டம் நடத்த வேண்டியசூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார் திருமாவளவன்.
ராமதாஸ் பேச்சு:
பின்னர் ராமதாஸ் பேசுகையில், தமிழை அழிக்க, சிதைக்க நினைப்போரை எத்தனை காலத்திற்குத்தான் பொறுத்துக்கொள்ள முடியும்? அவர்களை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
தமிழுக்கு எதிரியாக இருப்பவர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மாற்றவைப்போம்.
கோவில்களில் தமிழில் பூஜைகள் செய்யப்பட வேண்டும், கடைகளின் பெயர்ப் பலகைகள் தமிழில்எழுதப்பட்டிருக்க வேண்டும், திருமணங்கள் தமிழ் பாரம்பரியப்படி நடத்தப்பட வேண்டும், தொலைக்காட்சி,திரைப்படங்களில் தமிழ் வாழ வழி செய்யப்பட வேண்டும். இதைத்தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் தமிழ் இல்லாவிட்டால் வேறு எங்கு அது வாழ முடியும்? எங்களது கட்சியைப் பொருத்தவரை ஒருமொழிக் கொள்கையில்தான் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார் ராமதாஸ்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications