யாசர் அராபத் உடல்நிலை கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்:

பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத்தின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

75 வயதான யாசர் கடந்த இரண்டு வாரங்களாக சுகவீனமாக இருந்தார். இந் நிலையில் அராபத் நேற்று மாலைநினைவிழந்தார். அதன்பின்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்பு உடல் நிலை சற்றுசீரடைந்தது.

பின்னர் அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அராபத் இன்று காலை தொழுகை நடத்தினார். பின்பு தனதுஉதவியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் அதற்குப் பிறகு யாசர் அராபத்தின் உடல்நிலை மோசம் அடைந்தது. அவருக்கு சிகிச்சையளிக்க பக்கத்துநாடான ஜோர்டான் மற்றும் எகிப்தில் இருந்து சிறப்பு மருத்துவக்குழு ரமலா நகருக்கு விரைந்துள்ளது.

அராபத்தின் மனைவி சுகா தற்போது பாரிசில் இருக்கிறார். தகவல் அறிந்து அவர் ரமலா நகருக்கு விரைந்துள்ளார்.அராபத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பாலஸ்தீனத்தின் வெளியுறவு விவகாரங்களை கவனித்துக்கொள்ள 3 பேர் கொண்ட சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அக் குழுவில் பாலஸ்தீன பிரதமர் அகமது குரேயா, முன்னாள் பிரதமர் மெஹ்மூத் அப்பாஸ் மற்றும் பாலஸ்தீனதேசிய கவுன்சில் தலைவர் சலீம் ஆகியோர் ஸாளென் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே அராபத்திற்கு சிகிச்சைை அளிக்க இஸ்ரேல் அரசு தயாராக இருப்பதாக அந் நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷாகுல் மொபஸ் தெரிவித்துள்ளார். அராபத்தை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+