ரஜினி மகள் ஐஸ்வர்யா- தனுஷ் நவ.18ல் திருமணம்
சென்னை:
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுசுக்கும் அடுத்த மாதம் 18ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.
முதலில் சிலம்பரசனுடன் கிசுகிசுக்கப்பட்ட ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா. சிலம்பரசனும் ஐஸ்வர்யாவும்இணைந்து பாப் பாடல் கேசட்டுகளை வெளியிட்டு வந்தனர். நெருக்கமாக பழகி வந்த இருவரிடையே திடீரெனபிளவு ஏற்பட்டது.
இதையடுத்து தனுசுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதல் மூண்டுள்ளதாக பேசப்பட்டது. ஆனால், அதை இருவருமேமறுத்து வந்தனர்.
சுள்ளான் படப்பிடிப்பின்போது, சூட்டிங் ஸ்பாட்டிலேயே ஐஸ்வர்யா அடிக்கடி ஆஜராக ஆரம்பித்தார். இந்தக்காதலை வதந்தி என தனுஷ் மறுத்தார். ஐஸ்வர்யா என் அக்காவுக்கு தோழி. அவ்வளவுதான் என்றார்.
இந்தக் காதலை தனுஷ் வீட்டில் உடனே ஏற்றுக் கொண்டாலும், ரஜினி தரப்பில் ஆரம்பித்தில் எதிர்ப்புகாட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், காதலில் ஐஸ்வர்யா தீவிரமாக இருக்கவே திருமணம் செய்து வைக்கரஜினி சம்மதித்துவிட்டார்.
இதையடுத்து தனுசின் தந்தை கஸ்தூரிராஜாவும், அவருடைய மனைவி விஜயலட்சுமியும் ரஜினிகாந்த், லதாதம்பதியை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது தனுஷ், ஐஸ்வர்யா திருமணத்தை அடுத்த மாதம் 18ம் தேதிரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
திருமணம் தொடர்பாக தனுஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில்தான் நான் படித்தேன். அப்போது ஐஸ்வர்யாவும் என்னோடுபடிச்சாங்க. என் சகோதரியும் ஐஸ்வர்யாவும் நல்ல தோழிகள். பள்ளியில் படிக்கும்போது நானும், ஐஸ்வர்யாவும்நட்பாகத்தான் பழகினோம். படிப்பு முடிந்து நான் சினிமாவுக்கு வந்த பின்பு, நீண்ட நாட்கள் நாங்கள்சந்திக்கவில்லை.
துள்ளுவதோ இளமை படம் வெளியானபோது ஐஸ்வர்யா எனக்கு போன் பண்ணி பாராட்டினாங்க. ஒவ்வொருகாட்சியையும் புகழ்ந்தாங்க. எங்கள் நட்பு மீண்டும் தொடர்ந்தது. பிறகு அடிக்கடி என் வீட்டுக்கு அக்காவை பார்க்கவந்தபோது, என்கிட்டேயும் நிறைய நேரம் பேசுவாங்க.
காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான் படங்களையும் பார்த்து விட்டுபாராட்டினாங்க. அந்த சமயங்களில்தான் எங்கள் நட்பு கொஞ்சம் கொஞ்சமாய் காதலாக மலர்ந்தது. வீட்டுக்குத்தெரியாமல் நீண்ட நாட்கள் காதலிச்சோம்.
பின்பு திருமணம் செய்துக்க முடிவெடுத்து, எங்கள் காதலை இரு வீட்டு பெற்றோரிடமும் சொன்னோம். அவர்களும்ஏத்துக்கிட்டாங்க. எங்கள் திருமணம் அடுத்த மாதம் 18-ம் தேதி நடக்கிறது. மிகப் பெரிய நடிகர் ரஜினிகாந்த். அவர்மகள் ஐஸ்வர்யாவை மனைவியா அடையப் போறதை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. உலகிலேயேபெரிய அதிர்ஷ்டசாலி நான் என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications