ஸ்டாலின் தான் அடுத்த தலைவர்: அன்பழகன்
பொன்னேரி:
திமுக துணைப் பொதுச் செயலாளர் அடுத்த திமுக தலைவர் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன்கூறினார்.
பொன்னேரியில் நடந்த திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:
திமுக தலைவர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசுதமிழை செம்மொழியாக அறிவித்துள்ளது. இதற்கு காரணம் தமிழக வாக்காள பெருமக்கள்தான்.
தமிழர் உரிமை, தமிழகத்தின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் அது திமுக என்ற இயக்கத்தால்தான் முடியும்.இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இந்த இயக்கம் தழைத்து விளங்கும். கட்சியின் அடுத்த தலைவரை நாங்கள்எப்பொழுதோ தேர்ந்தெடுத்து விட்டோம். அவர்தான் ஸ்டாலின்.
அவர் திமுகவின் அடுத்த தலைவராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. முதல்வர் ஜெயலலிதா மேயர்பதவியை பறித்துவிட்டதால் ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை முடிவடைந்துவிடாது. ஸ்டாலினுக்கு என்று ஒருவரலாறு உள்ளது, சென்னையிலிருந்த மேயர்களில் சிறந்த மேயர் ஸ்டாலின்தான்.
எனவேதான் சென்னை மக்கள் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தனர். ஆனால் ஜெயலலிதா அதை தடுத்துவிட்டார்.தமிழ் மொழியை செம்மொழி ஆக்கியதற்கு பாடுபட்ட கருணாநிதியை இன்று பெரியார், அண்ணா இருந்திருந்தால்உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்கள் என்று பேசினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications