2 வயது மகளை தூக்கிலிட்ட தந்தை கைது
வத்தலகுண்டு:
வத்தலகுண்டு அருகே இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் ஆத்திரமடைந்த தந்தை, முதல்குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார்.
வத்தலகுண்டு அருகே உள்ள சித்தூரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (26). சலூன் கடை நடத்தி வருகிறார். இவரதுமனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு முத்துலட்சுமி (2) என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இந் நிலையில் சமீபத்தில் காளீஸ்வரிக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கும்என்று எதிர்பார்த்திருந்த சீனிவாசன் இதனால் ஆத்திரமடைந்தார். கோபத்தில் மூத்த மகள் முத்துலட்சுமியைஉயிருடன் தூக்கில் தொங்கவிட்டார்.
தூக்கில் தொங்கிய அந்தப் பிஞ்சுக் குழந்தை, சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தது. இதையடுத்து வீட்டைப்பூட்டிவிட்டு சீனிவாசன் வெளியே ஓடிவிட்டார்.
அருகில் இருந்தவர்களுக்கு விஷயம் தெரியவர அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்துபட்டிவீரன்பட்டி போலீஸார் விரைந்து வந்து குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சீனிவாசனை கைது செய்தனர்.
பெற்ற மகளை தந்தையே தூக்கிலிட்டு கொன்றது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications