மிஸ் இந்தியா - ஆஸ்திரேலியா: தமிழ் பெண் தேர்வு
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் நடந்த மிஸ் இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த விமலாராமன் வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம் அடுத்த ஆண்டு மும்பையில் நடக்கும் மிஸ் இந்தியா வோல்ர்ட் வைட் போட்டியில் பங்கு பெற விமலாதகுதி பெற்றுள்ளார்.
சிடினியில் வசிக்கும் 23 வயதான விமலா, நியூ செளத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மிஸ்இந்தியா-ஆஸ்திரேலியாவாக தேர்வு செய்யப்பட்டார். மெல்போர்னைச் சேர்ந்த டினா ஜார்ஜ் இரண்டாவது இடம்பெற்றார்.
இப் போட்டியில் மொத்தம் 20 பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மிஸ் இந்தியா-ஆஸ்திரேலியா கிளாமர் குயீனாக ஷரோன் ஜீத் கோஹல் தேர்வு செய்யப்பட்டார். இன்டர்நெட்மூலம் நடத்தப்பட்ட வாக்குப் பதிவில் இவர் வென்றார். இவர் அடிலைடில் வசிக்கிறார்.
அழகிப் பட்டம் வென்றுள்ள விமலா ராமன், ஒரு சாப்ட்வேர் நிபுணராவார். பரதநாட்டியத்திலும் தேர்ச்சி பெற்றவர்.வருடந்தோறும் நடக்கும் மகாபலிபுரம் பரதநாட்டிய விழாவில் தவறாமல் பங்கேற்று வருகிறார்.
நியூசிலாந்த், பிஜி, மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பல நிறுவனங்களுக்கு மாடலிங் செயய்யவும் ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications