நான் ஏன் பதவி விலக வேண்டும்: ஜெ கேள்வி
சென்னை:
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தமிழகம் மற்றும் நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குரியாக்கிய கருணாநிதிக்கு,என்னை பதவி விலகச் சொல்ல எந்த அருகதையும் இல்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் நான் பேசிய உரையாடலை வெளியிட்டதன் மூலம் நான் ரகசிய காப்பு பிரமாணத்தைமீறிவிட்டதாகவும், இதனால் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார்.
ஆளுநர் மாற்றம் தொடர்பான பிரச்சனை கடந்த சில மாதங்களாகவே பொது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இதில்ரகசியம் ஏதும் இல்லை. உச்ச நீதிமன்றத்தில் எதையும் மறைக்க விரும்பாமல் தான் நடந்ததைத் சொன்னோம்.
தலைமைச் செயலாளர் மூலம் தான் மாநில அரசின் நிலையை உச்ச நீதிமன்றத்தில் விளக்க முடியும். அதைத் தான் லட்சுமி பிரனேஷ்செய்தார். சிவராஜ் பாட்டீலுடன் நான் பேசியதை பத்திரிக்கைகளுக்கு வெளியிடவில்லை. நீதிமன்றத்திடம் தான் தெரிவித்தோம். இதனால்,இந்த விஷயத்தில் யாரும் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிடவில்லை.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குரியாக்கிய ஒரு நபர் (கருணாநிதி) என்னைரகசிய மீறல் காரணம் சொல்லி பதவி விலகக் கோருவது மட்டமான செயல்.
பச்சோந்தியான கருணாநிதி இப்போது என்னவோ சாமியார் மாதிரி வேஷம் போட முயல்வது வேடிக்கையானது.
எனது ஆட்சியைக் கலைக்க வேண்டும், ஏதாவது கோல்மால் செய்து அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்பது தான் கருணாநிதியின் ஒரேகுறிக்கோள்.
கருணாநிதியும் அவரது புதிய கூட்டாளி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் சேர்ந்து கொண்டு தங்களுக்கு வேண்டிய ஒருவரை (பர்னாலா)ஆளுநராக்க சதி செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது அரசை நிலைகுலையச் செய்ய வைப்பதே இந்தக்கும்பலின் நோக்கம்.
மிகச் சிறப்பான நிர்வாகத்தை வழங்கி வரும் எனது அரசுக்குத் தொல்லை தருவதற்காக தனக்கு வேண்டிய ஒருவரை கவர்னராக்ககருணாநிதி பல காலமாக முயன்று வந்தார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications