இந்தியன் ஏர்லைன்சின் குடும்ப சலுகை
மும்பை:
தனியார் விமான நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்கும் விதத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், குடும்பத்துடன் பயணம்செல்பவர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்தியன் ஏர்லைன்ஸ் குடும்ப டிக்கெட் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ், இரண்டு பெரியவர்களுடன் பயணம் செல்லும், 12வயதிற்குட்பட்ட 2 சிறுவர்களுக்கு பயணக்கட்டணம் முற்றிலும் இலவசம்.
சிறுவர்களின் வயது 12 வயதிலிருந்து 18 வயதிற்குட்பட்டு இருந்தால் பயணக்கட்டணத்தில் பாதியைச் செலுத்தினாலே போதும். 12வயதிற்குக் கீழ் ஒரு சிறுவனும், அதற்கு மேற்பட்ட வயதில் ஒரு சிறுவனும் இருந்தால், ஒரு அரை டிக்கெட் மட்டும் வாங்கினால் போதும்.
இந்தச் சலுகை அடுத்த வருடம் ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும். எக்கானமி கிளாஸ் பயணிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகைபொருந்தும்.
இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 43.4 சதவீத பயணிகளும், இந்தியன் ஏர்வேஸ் நிறுவனத்தில் 38.8சதவீத பயணிகளும் பயணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications