3ம் தேதி சந்திரிகா இந்தியா வருகை
டெல்லி:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா நவம்பர் 3ம் தேதி இந்தியா வருகிறார்.
டெல்லியில் ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களை சந்திக்கும் அவர் தடைபட்ட அமைதிப்பேச்சுவார்த்தை, இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதிக்கவுள்ளார்.
சந்திரிகாவுடன் வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமரும் வரவுள்ளார்.
புலிகள் நிலை: பெரிஸ் விளக்கம்
இந் நிலையில் தமிழகம் வந்த முன்னாள் வெளியுறவு அமைச்சரும், புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசின்சார்பில் பங்கேற்றவருமான ஜி.எல்.பெரிஸ் அளித்துள்ள பேட்டியில்,
அமைதிப் பேச்சுவார்த்தைகளின்போது கூட்டாட்சியின் கீழ் வட கிழக்கில் சுயாட்சி அதிகாரம் கொண்ட நிர்வாக அமைப்புக்கு தலைமைதாங்க புலிகள் முன் வந்தனர். அதே நேரத்தில் தனி நாடு கோரிக்கையை அவர்கள் ஒட்டுமாத்தமாக கைவிடுவதாக சொல்லவில்லை. கடைசிஆயுதமாக அதைப் பயன்படுத்துவோம் என்று தெரிவித்திருந்தனர்.
இதனால் திடீரென புலிகள் மீண்டும் தனி நாடு கோரிக்கையை முன் வைப்பதாக சொல்வது சரியல்ல. அமைதிப் பேச்சுவார்த்தையைமீண்டும் துவக்க சந்திரிகா அரசு ஆர்வம் காட்டவில்லை. இந்த விஷயத்தில் சந்திரிகாவுக்கும் ஜே.வி.பிக்கும் இடையே தீவிர கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன என்றார்.
டக்ளஸ் கோரிக்கை:
இதற்கிடையே சுயாட்சி அதிகாரக் கோரிக்கையை கைவிட்டுவிட்டு உடனே அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு விடுதலைப் புலிகள் திரும்பவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இந்தியாவின் இலங்கைக் கொள்கை என்ற தலைப்பில் டெல்லியில் நடந்த மாநாட்டில் பேசிய டக்ளஸ், பேச்சுவார்த்தைகளில் இனியும்பங்கேற்காமல் புலிகள் தாமதித்தால், அது தமிழர்களுக்குச் செய்யும் துரோகமாகும். இலங்கை விவகாரத்தில் இந்தியாவும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றார்.
இந்து பத்திரிக்கை ஆசிரியர் என்.ராம் பேசுகையில், முன்பு செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இலங்கை விவகாரத்தில் இந்தியாவும்பங்காற்ற முடியும் என்றார்.
முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் பேசுகையில், அதிகாரப் பகிர்வும் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளை சீரமைக்க சர்வதேச நாடுகள்உதவுவதும் தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண உதவும். இலங்கையில் எதனால் தீவிரவாதம் தலை தூக்கியது, பிரச்சனையின் வேர் எதுஎன்பதை உணர்ந்து அதைத் தீர்க்க முயல வேண்டும் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications