கார்கள் தொடர் மோதல்: 16 எம்.பிக்கள் தப்பினர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அருகே 16 எம்.பிக்கள் சென்ற கார்கள் தொடர் விபத்தில் சிக்கி ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.
நாடாளுமன்ற உணவு மற்றும் வினியோகக் கமிட்டியைச் சேர்ந்த இந்த எம்.பிக்கள் பாண்டிச்சேரியில் உணவுத்துறையின் செயல்பாடு குறித்துஆய்வு செய்ய வந்தனர். தேவேந்திர பிரசாத் தலைமையில் டெல்லியில் இருந்து அதிகாரிகளுடன் விமானத்தில் சென்னை வந்து,அங்கிருந்து 18 கார்களில் பாண்டிச்சேரி சென்றனர்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் செய்யூர் என்ற இடத்தில் இடையில் மாடு குறுக்கே வந்தது. இதையடுத்து முதல் கார் சடன் பிரேக் போட்டுநிறுத்தப்பட, பின்னால் வந்த கார்கள் உடனே நிற்க அவகாசமில்லாமல் ஒன்றுடன் ஒன்று மோதின.
இதில் 8 கார்களின் கண்ணாடிகள் உடைந்தன. 4 கார்கள் பலத்த சேதமடைந்தன. ஆனால், அவற்றில் பயணம் செய்த யாருக்கும் காயம்ஏற்படவில்லை. அனைவரும் சிறிது நேர கால தாமதத்துக்குப் பின் மற்ற கார்களில் பயணத்தைத் தொடர்ந்தனர்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications