வீரப்பன் கூட்டாளிக்கு 3 ஆண்டு சிறை
ஈரோடு:
வீரப்பனின் கூட்டாளியான துப்பாக்கிச் சித்தனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு பர்கூர் வனப்பகுதியில் உள்ள கருப்பட்டி கிராமம் அருகே வீரப்பன் கும்பலுக்கும், அதிரடிப்படை வீரர்களுக்கும்இடையே நடந்த மோதலில் வீரப்பன் கும்பலைச் சேர்ந்த 2 பேரை அதிரடிப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்த மோதல் தொடர்பாக வீரப்பன் உள்ளிட்டவர்கள் மீது அந்தியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்சம்பந்தப்பட்ட வீரப்பனின் கூட்டாளியான சித்தன் எனப்படும் துப்பாக்கிச் சித்தன் கடந்த 1998ம் ஆண்டு அப்போதைய டிஜிபி காளிமுத்துமுன்பு சரணடைந்தார்.
சித்தன் கைது செய்யப்பட்டு அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் பவானி விரைவு நீதிமன்றத்தில்விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பான வழக்கில், துப்பாக்கிச்சித்தனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி பாண்டுரங்கன் தீர்ப்பளித்தார்.
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications