வீராணம் ஏரி நிரம்பியது; உபரி நீரால் வயல்கள் மூழ்கின
கடலூர்:
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி நிரம்பி வழிகிறது. ஏரி உடைந்து விடாமல் தடுப்பதற்காகதிறந்துவிடப்பட்ட உபரி நீரால் சில கிராமங்களில் வயல்கள் மூழ்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது வீராணம். இங்குள்ள ஏரியிலிருந்துதான் தற்போது சென்னைக்குகுழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்து வந்த வீராணம் ஏரி தற்போது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. வீராணம்ஏரியின் மொத்த கொள்ளளவு 47.5 அடியாகும். இதில் தற்போது 46.9 அடி நீர் அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது.இதனால் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஏரியிலிருந்து விநாடிக்கு 4,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏற்கனவே தொடர்ந்துபெய்து வரும் மழை காரணமாக வயல்கள் மூழ்கி, பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் கூடுதலாகவீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வயல்கள் மேலும் மோசமாக பாதிப்படைந்துள்ளன.
திருநாரையூர், புளியங்குடி, எடையார், வவ்வால்தோப்பு, நெடும்பூர், மேலவன்னியூர் உள்பட பல கிராமங்களில்வயல்கள் மூழ்கியுள்ளன. கிராமங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதேபோல தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் கன மழையால் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் வேகமாகநிரம்பி வருகின்றன. பல மாவட்டங்களில் அணைகள் நிரம்பி வருவதால் பாதுகாப்பை கருதி திறந்து விடப்பட்டுவருகின்றன.
சென்னை நகரிலும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நகரில் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications