பாட்டீல் பேச்சை டேப் செய்யவில்லை: ஜெ.
சிவகாசி:
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தன்னுடன் தொலைபேசியில் பேசியதை டேப்பில் பதிவு செய்யவில்லை என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ஆளுநர் மாற்றம் தொடர்பாக என்னுடன் தொலைபேசியில் பேசியதை நான் டேப்பில் பதிவுசெய்யவில்லை. எனவே ரகசியக் காப்பு பிரமாணத்தை நான் மீறியதாகக் கூற முடியாது.
தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதோ, பதிவு செய்வதோ எனது வாடிக்கையல்ல. பாட்டீலுடன் நான் பேசிய விவரங்களில்,எனக்கு நினைவில் இருந்ததை நான் கூற அதை அபிடவிட் மனுவாக தலைமைச் செயலாளர் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.
பாட்டீலும், நானும் மேலும் பல விஷயங்கள் குறித்தும் பேசினோம். அவற்றையெல்லாம் எனது மனுவில் குறிப்பிடவில்லை. எனவே இதைநம்பிக்கைத் துரோகம் என்றும் கூற முடியாது, ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறி விட்டதாகவும் கூற முடியாது.
எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையை தேவையில்லாமல் திசை திருப்பப் பார்க்கின்றன. திமுக தலைவர் கருணாநிதி போன்றவர்கள் கடந்தகாலத்தில் விடுதலைப் புலிகள் போன்ற தீவிரவாதிகளை தமிழ்நாட்டுக்குள் ஊடுறுவ விட்டு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலைஏற்படுத்தியதுபோல நான் நாட்டுக்குத் துரோகம் எதையும் செய்து விடவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications