ஜெ. பேச்சில் உண்மையில்லை: கருணாநிதி
சென்னை:
ஆட்சிக் கலைப்பு பயம் காரணமாகவே, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் பேச்சை டேப்செய்யவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதியில் முரசொலியில் எழுதிய கடிதத்தில், பாட்டீலின் பேச்சை டேப் செய்யாமல்இருந்திருந்தால், ஜெயலலிதாவால் அவரது பேச்சின் சாராம்சத்தை மட்டுமே கூறியிருக்க முடியும். இப்போதுகூறியதுபோல் வார்த்தைக்கு வார்த்தை கூற முடியாது.
ஜெயலலிதா இது தொடர்பாக முதலில் அளித்த பேட்டியில், டேப் செய்யவில்லை என்று கூறவில்லை. ரகசிய காப்புபிரமாணத்தை மீறவில்லை என்று மட்டுமே கூறினார். டேப் செய்யவில்லை என்று இப்போது வெளியிட்டஅறிக்கையை யாரும் நம்பத் தயாராக இல்லை.
முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்ஸன், முன்னாள் கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோர்தொலைபேசி டேப் விவகாரத்தாலேயே தங்களது பதவியை இழந்தனர். அந்தப் பயம் காரணமாகவே ஜெயலலிதாஇப்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் லட்சுமி பிராணேஷ் போன்ற நேர்மையானவர்களும் அதிமுக ஆட்சியில் தங்களதுபதவியைக் காத்துக் கொள்வதற்காக வளைந்து கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் சென்னைக்கு வந்தபோது அவரை சந்திக்க முடியாமல் போனதன் காரணத்தை விளக்கிஅவருக்கு எழுதிய கடிதத்தின் நகலையும், அதற்கு மன்மோகன் சிங் வெளியிட்ட பதில் கடிதத்தின் நகலையும்கருணாநிதி வெளியிட்டார்.
வாசன் கருத்து:
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், ஜெயலலிதாவின் மறுப்பு அறிக்கை மூலம் அவர் டேப் செய்ததுசந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகியுள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications