பாபர் மசூதி இடிப்பு: அத்வானிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
லக்னெள:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அத்வானி, பால்தாக்கரே ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து துணைப் பிரதமராக இருந்த அத்வானி, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே, பா.ஜ.க.தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், வினய் கட்யார், வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கல் உள்பட21 பேர் 2001ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
மொத்தம் 49 பேர் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதில் இந்த 21 பேர் மீதான குற்றப் பத்திரிக்கையில் தவறுகள்இருப்பதாகக் கூறி, அதன் அடிப்படையில் இவர்களை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுக்லா விடுதலை செய்தார்.
இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றக் கிளையில் சிபிஐ மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதில், சிபிஐ சிறப்புநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துவிட்டு, அத்வானி உள்பட 21 பேர் மீதும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றுகோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஏ.கான், இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தவிசாரணையை டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications