இன்று கிளம்புகிறார் ராவ்: நாளை வருகிறார் பர்னாலா
சென்னை:
தமிழக ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா நாளை பதவியேற்கவுள்ளார்.
ராம்மோகன் ராவ், மத்திய அரசின் நெருக்குதல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ஆளுநராகநீடிப்பதன் கடைசி நாள் இன்று.
புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, தற்போதைய ஆந்திர மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நாளை காலைபதவியேற்கிறார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநராக பர்னாலா இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1989-1990ம் ஆண்டுஆளுநராக இருந்தார். ஒரு ஆண்டு காலம் மட்டுமே பதவி வகித்த அவர் திமுக அரசைக் கலைக்க உதவாத காரணத்தால்அப்போதைய பிரதமர் சந்திரசேகர் மற்றும் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, பதவி விலகிச் செல்லும் ஆளுநர் ராம் மோகன் ராவ் இன்று தனது சொந்த ஊரான ஹைதராபாத் புறப்பட்டுச்செல்கிறார்.
பூட்டா சிங் கவர்னரானார்:
இதற்கிடையே முன்னாள் உள்துறை அமைச்சர் பூட்டா சிங் பிகார் மாநில ஆளுநராகவும், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவரானபிரதிபா படேல் ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications