சாப்ட்வேர்: வேகமாய் முன்னேறும் கோவை, மதுரை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

எதிர்காலத்தில் கோவை, மதுரை போன்ற சிறிய நகர்கள் சாப்ட்வேர் தொழில்துறையில் மிக வேகமான முன்னேற்றம் அடையும்என்று சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க் ஆப் இந்தியாவின் (STPI) டைரக்டர் ஜெனரல் எஸ்.என். ஜிந்தல் கூறியுள்ளார்.

பெங்களூரில் ஐ.டி.காம் மெகா தொழில்நுட்பக் கண்காட்சியில் டெக்னாலஜி அவுட்சோர்சிங் குறித்த மாநாட்டை துவக்கி வைத்துஅவர் பேசியதாவது:

பெரிய நகர்களை விட செலவு பல மடங்கு குறைவாக இருப்பதாலும், ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்கு செல்வது குறைவாகஇருப்பதாலும் சாப்ட்வேர், பிபிஓ ஏற்றுமதியில் பெரிய நகரங்களை விட மதுரை, கோவை, மங்களூர், போபால், ஜெய்ப்பூர்,மைசூர் உள்ளிட்ட இரண்டாம் நிலை நகர்கள் எதிர்காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை அடையும்.

அடுத்த 5 ஆண்டுகளிலேயே இதனை நாம் காணப் போகிறோம். இதனால் தகவல் தொடர்பை மேம்படுத்த நாடு முழுவதும்எஸ்.டி.பி.ஐ. தனது எர்த் ஸ்டேசன்களை அமைக்க ஆரம்பித்துள்ளது. விரைவில் சிறிய நகர்களுக்கும் இந்த வசதி நீட்டிக்கப்படும்.

சிறிய நகர்களுக்கும் செயற்கை இழை தகவல் தொழில்நுட்பம், செயற்கைக் கோள் தகவல் தொழில்நுட்ப வசதிகள் போய்ச் சேரஆரம்பித்துவிட்டன. இதனால் பெரிய நகர்களைவிட சிறிய நகர்கள் விரைவான வளர்ச்சியை எட்டவுள்ளன.

பெருநகர்களை விட்டுவிட்டு அடுத்த கட்ட நகர்களை நோக்கிச் செல்லுமாறு நாங்களே பிபிஓ, சாப்ட்வேர் நிறுவனங்களைகேட்டுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.

பெரிய நகர்களை சாப்ட்வேர் நிறுவனங்கள் ஏற்றுமதி மற்றும் வர்த்தகம் சார்ந்த பிற விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.சாப்ட்வேர் தயாரிக்கும் பணியை சிறிய நகர்களுக்குக் கொண்டு சென்றுவிடலாம் என்றார்.

ஐடி: குறையும் மாணவர்கள் எண்ணிக்கை

அதே நேரத்தில் பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தொடர்பாக படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் குறையஆரம்பித்துவிட்டதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ஐ.டி.காமில் பேசிய அவர்,

மீண்டும் மெக்கனிக்கல் என்ஜினியரிங், கெமிக்கல் என்ஜினியரிங் ஆகியவற்றுக்கே மாணவர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஐடி பிரிவில் இடங்கள்காலியாகக் கிடப்பது அதிகரித்துவிட்டது.

டாட் காம் தோல்வியில் இருந்து இந்திய தொழில்நுட்பத்துறை இன்னும் மீளவில்லை. இருந்தாலும் விரைவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்பயின்றவர்களுக்கு மிகப் பெரிய டிமாண்ட் ஏற்படப் போவது நிச்சயம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+