கலாமுக்கு நக்சலைட்டுகள் கொலை மிரட்டல் !
பாண்டிச்சேரி:
ஜனாதிபதி அப்துல் கலாம் பாண்டிச்சேரி வந்திருந்தபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரி விடுதலையானதின் பொன்விழாவையொட்டி அம் மாநில சட்டசபை சிறப்புக்கூட்டத்தில் கலாம் நேற்று உரையாற்றினார். அத்தோடு வேறு சில நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார்.
கலாம் வருகையையொட்டி புதுவை முழுவதும் வழக்கத்தைவிட மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இது குறித்துகாவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது,
பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது:
நேற்று காலை மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் வீட்டில் காலை யாரோ சிலர், ஆடியோ கேசட் ஒன்றை வீசி விட்டு ஓடினர்.
அந்தக் கேசட்டில் சுற்றப்பட்டிருந்த தாளில், இன்று உங்களது பாதுகாப்பில் இருக்கும் முக்கிய நபர் (ஜனாதிபதி கலாம்)கொல்லப்படுவார் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த கேசட்டில் தமிழ்ப் பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அனைத்துப்பாடல்களும் நக்சலைட் அமைப்புகளைச் சேர்ந்த பாடல்கள் போல இருந்தன.
இதையடுத்து கலாமுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சட்டசபைக்கு வரும் சில முக்கியச் சாலைகள் மூடப்பட்டுபலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கொலை மிரட்டல் குறித்து ஓர்லியன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல்விடுத்தவர்கள யார் என்பதை போலீஸார் விசாரித்து வருகிறார்கள் என்றார்.
வீண் பரபரப்பு கிளம்பிவிடும் என்பதால் தான் கலாம் வந்தபோது இந்தத் தகவலை காவல்துறை வெளியிடவில்லை என்றார்.
நக்ஸல்கள் தான் கொலை மிரட்டல் விடுத்தார்களா அல்லது அவர்களது பெயரில் வேறு யாராவது மிரட்டல் விடுத்தார்களா என்றகோணத்தில் விசாரணை நடக்கிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications