பரிசுப் பையை தவற விட்ட அதிரடிப்படை வீரர்!
மதுரை:
வீரப்பனை வீழ்த்தியதற்காக சென்னையில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்துவாங்கிய ரொக்கப் பரிசு, வீட்டு மனைப் பட்டா, பதவி உயர்வு உத்தரவு ஆகியவை அடங்கிய பையை தவறவிட்டுள்ளார் மதுரையைச் சேர்ந்த அதிரடிப்படை வீரர்.
மதுரை கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அருள் பிரகாஷ், சிறப்பு அதிரடிப்படையில் உள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பரிசுகளையும், பதக்கத்தையும் பெற்ற அருள் பிரகாஷ் தனது குடும்பத்தினருடன்போலீஸ் வாகனத்தில் மதுரை வந்து சேர்ந்தார்.
மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே இறங்கிய அருள்பிரகாஷ் தனது குடும்பத்தினரை பஸ்சில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
தனது நண்பர்களைப்பார்த்து விட்டு வருமாறு கூறிச் சென்றார்.
பரிசுகள், பதக்கம் அடங்கிய தோல் பையுடன் அருள் பிரகாஷின் பெற்றோர் கொண்டு பஸ்சில் ஏறினர். பஸ்சில்கூட்டம் அதிகமாக இருக்கவே, அமர்ந்து கொண்டிருந்த ஒரு பெண் தோல் பையை வைத்திருப்பதாகக் கூறிவாங்கியுள்ளார்.
அய்யர் பங்களா பஸ் நிறுத்தம் வந்தபோது, தோல் பையை வைத்திருந்த பெண், அதை அருள் பிரகாஷின்தாயாரிடம் கொடுத்து விட்டு இறங்கிச் சென்றார். கிருஷ்ணா நகர் வந்தவுடன் அருள் பிரகாஷின் பெற்றோர்இறங்கியுள்ளனர்.
இறங்கிய பின் தோல் பையைப் பார்த்தபோது அதில் எதுவுமே இல்லை. ரூ. 3 லட்சத்திற்கான காசோலை, முதல்வர்கொடுத்த பதக்கம், இலவச வீட்டு மனைக்கான பட்டா, பதவி உயர்வுக்கான கடிதம் ஆகிய அனைத்தும் காணாமல்போயிருந்தன.
இதுகுறித்து ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் அருள் பிரகாஷ் புகார் கொடுத்துள்ளார்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications