கன மழை: தஞ்சையில் வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக அரசின் வேளாண்துறை ஆணையர்ஜக்மோகன் சிங் ராஜு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
வட கிழக்குப் பருவ மழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இந்த தொடர் மழைக்கு தஞ்சை, திருவாரூர்,நாகப்பட்டனம், திருச்சி போன்ற காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நலங்களில் பயிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.பெரும்பாலான இடங்களில் நெற் நாற்றுக்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. பல கிராமங்களில் கண்மாய்கள் உடைந்து வயல்வெளிகளிலும் வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது.
இந்தச் சேதம் குறித்து மதிப்பீடு செய்ய வேளாண்துறை ஆணையர் ஜக்மோகன் சிங் ராஜு காவிரிப் பாசன மாவட்டங்களுக்குஇன்று வந்தார்.
காலையில் தஞ்சை வந்த ஜக்மோகன் சிங் ராஜு அம் மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட சீராளூர், தென்னங்குடி உள்ளிட்டபல ஊர்களைப் பார்வையிட்டார். சேத மதிப்பை ஆய்வு செய்த அவரிடம் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள்கண்ணீர் விட்டு அழுதனர்.
இத்தனையாண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்ட நாங்கள் இப்போது வெள்ளத்தால் மிக மோசமான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம் என அவர்கள் கூறினர். நீரில் மூழ்கிப் போய் விட்ட பயிர்களைக் காட்டி தங்களது அவல நிலையைஅதிகாரியிடம் விளக்கினர்.
கண்மாய்களும், வாய்க்கால்களும் சரிவர தூர் வாரப்படாததால் தான் இரண்டு நாள் மழையிலேயே வெள்ளம் வயல்களில்புகுந்துவிட்டது என்று பல விவசாயிகளும் குற்றம் சாட்டினர்.
ராஜுவுடன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் உடன் வந்திருந்தார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications