சுடப்பட்டது வீரப்பனின் பிணம் தான்: முத்துலட்சுமி
தர்மபுரி & சென்னை:
வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தர்மபுரி உதவி கலெக்டர் பிரகாசத்திடம் ஆஜராகி வீரப்பனின்மனைவி முத்துலட்சுமி வாக்குமூலம் அளித்தார். சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின் மனு ஒன்றையபம்சமர்பித்துள்ளார் முத்துலட்சுமி.
இதன் பின்னர் நிருபர்களிடம் முத்துலட்சுமி கூறியதாவது:
என் கணவரை விஜய்குமாரும் அவரது படையினரும் துப்பாக்கிச் சண்டை நடத்தி கொல்லவில்லை. செத்த பிணத்தை கொண்டுவந்து துப்பாக்கி சண்டையில் இறந்ததாக கூறியுள்ளனர். இது கோழைத்தனமான போலீஸ் நாடகம்.
அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்து வெளி மாநில டாக்டர்களைக் கொண்டு மறு பிரதேப் பரிசோதனை நடத்த வேண்டும்.இந்த விஷயத்தில் உண்மை வெளிவரும் வரை ஓய மாட்டேன்.
இந்தக் கொலைக்கு நீதி கிடைக்க சட்டப்பூர்வமான நடவடிக்கையிலும் ஈடுபடுவேன். அவரது சாவில் நிறைய மர்மங்கள் உள்ளனஎன்றார்.
வீரப்பன் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் சொன்ன முத்துலட்சுமி தரப்பு, பின்னர் வீரப்பனுக்கு மிகவும் வேண்டியநபர்களை பணம் கொடுத்து வளைத்த அதிரடிப்படை, அவர்கள் மூலம் வீரப்பனுக்கு உணவில் விஷம் கொடுத்துகொன்றுவிட்டதாகவும் கூறி வருகிறது.
இந் நிலையில் விசாரணை நடத்தும் உதவி கலெக்டர் பிரகாசத்திடம் விஜய்குமாரும் ஆஜராகி வாக்குமூலம் தரவுள்ளார்.
ஜெ. பேச்சு அநாகரீகம்: வாசன்
இதற்கிடையே அதிரடிப்படையினருக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசிய பேச்சு அநாகரீகமானது எனகாங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
வீரப்பன் கொல்லப்பட்டது நல்ல விஷயம் தான். ஆனால், அதற்காக அதிபடிப்படையினரை பாராட்டி விழா நடத்துவதாகச்சொல்லிக் கொண்டு எதிர்க் கட்சியினரை விமர்சித்துள்ளார். போலீஸ் அதிகாராகளை உடன் மேடையில் வைத்துக் கொண்டுஅரசியல் பேசிய ஜெயலலிதாவின் செயல் உண்மையிலேயே அநாகரீகமானது.
தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மக்கள் விரும்பும்படி இல்லை. இதனால் தான் கவர்னரை மாற்றினாலும் அதை விமர்சிக்கிறார்ஜெயலலிதா என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications