Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புஷ்: 254- கெர்ரி: 252: ஓகியோவின் கையில் முடிவு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

Bushஅமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஜார்ஜ் புஷ் முன்னிலையில் உள்ளார்.இதனால், ஓகியோ மாகணத்தின் முடிவை வைத்தே வெற்றி தோல்வி நிர்ணயமாகும்.

புஷ்ஷை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜான் கெர்ரி இப்போதைக்குப் பின் தங்கியிருந்தாலும்ஓகியோவில் வெற்றி பெறுவேன் என்று அறிவித்துள்ளார்.

ஆனால், தாங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி ஓகியோவில் ஜார்ஜ் புஷ் வென்றுள்ளதாகவும், இதன் மூலம் 288 வாக்குகள்பெற்று புஷ் மீண்டும் அதிபராகப் பதவியேற்பது உறுதி என்றும் குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது.

புஷ் 254- கெர்ரி 252:

தேர்தலில் வெல்ல 270 வாக்குகள் தேவைப்படும் நிலையில், இதுவரை 254 வாக்குகளை வென்றுள்ளார் புஷ். அதே நேரத்தில்ஜான் கெர்ரி 252 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

நியூ ஹாம்ப்சையர் மாகாணத்தை புஷ்சிடம் இருந்து வென்றுள்ளார் கெர்ரி. ஓகியோவின் 2.5 லட்சம் தபால் வாக்குகள்எண்ணப்பட வேண்டியுள்ள நிலையில், அங்கும் ஜெயித்தால் தான் ஜார்ஜ் புஷ்ஷின் வெற்றி உறுதியாகும்.

முடிவு தெரிய 11 நாளாகும்?:

இந்த மாகாணத்தில் சட்டப்படி தேர்தலுக்குப் பின் 11 நாள் கழித்தே தபால் வாக்குகள் மற்றும் வேறு பகுதிகளில் வசிக்கும் இம்மாகாணத்தைச் சேர்ந்த ராணுவத்தினர் அளித்த வாக்குகள் எண்ணப்படும். இந்த வாக்குகள் வந்து சேர வசதியாக 11 நாள் காலஅவகாசம் தரப்படுகிறது.

இம் மாகாணத்தில் ராணுவத்தினரின் வாக்குகள் அதிகம் என்பதால், ஓகியோவின் முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியாக 11நாட்கள் ஆகும். ஆனால், நாளையே தோராயமான முடிவு வெளியாகிவிடும். இந்த வாக்குகளின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைத்தாண்டும். இவை எண்ணப்பட்ட பின்னரே அதிபர் தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

ஆனால், ஓகியோவின் மற்ற வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

முன்னிலையில் புஷ்:

இப்போது புஷ் வகித்து வரும் முன்னிலையின் அடிப்படையில் அவர் அதிகபட்சமாக 269 இடங்களை வெல்லக் கூடும் என்று சிலஎக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. (இது மெஜாரிட்டிக்கு 4 இடங்கள் குறைவு என்றாலும் ஆட்சியமைத்திடமுடியும்).

இதனால் தனது வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.

ஆனால், ஓகியோ மாகாணத்தின் முடிவு தெரியாத வரை யாரும் வென்றதாகவோ தோற்றதாகவோ முடிவுக்கு வர முடியாது எனகெர்ரியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

புஷ் வென்ற மாகாணங்கள்:

புளோரிடா, அர்கான்சாஸ், மிசெளரி, இண்டியானா, கென்டகி, ஜார்ஜியா, வெஸ்ட் விரிஜீனியா, அலபாமா, ஒக்லஹாமா,டென்னசி, விர்ஜீனியா, செளத் கரோலினா, நார்த் கரோலினா, டெக்ஸஸ், கன்சாஸ், நெப்ரஸ்கா, செளத் டகோடா, மிஸிஸிபி,லூசியானா, வியாமிங், உடா, அரிசோனா, இடாஹோ, மோன்டனா, அலாஸ்கா, கொலராடோ, நெவாடா ஆகிய மாகாணங்களில்புஷ் வெற்றி பெற்றுள்ளார்.

கெர்ரி வென்ற மாகாணங்கள்:

மின்னசோடா, வெர்மோண்ட், டெல்வேர், கனெக்டிகட், கொலம்பியா, இலினாய்ஸ், மெய்ன், மேரிலேண்ட், மசாசூசெட்ஸ்,நியூஜெர்சி, நியூயார்க், ரோட் ஐலண்ட்ஸ், பென்சில்வேனியா, கலிபோர்னியா, வாஷிங்டன், நியூ ஹேம்ப்ஸைர், ஓரேகான், மிச்சிகன்,விஸ்கான்சின், ஹவாய் ஆகிய மாகாணங்களை கெர்ரி கைப்பற்றியுள்ளார்.

இதுவரை 27 மாகாணங்களில் வென்றுள்ள புஷ் 254 வாக்குகளை பெற்றுள்ளார். அதே நேரத்தில் 20 மாகாணங்களில் வென்றுள்ளஜான் கெர்ரி 252 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு மாகாணத்தையும் வென்றால் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் அந்தக் கட்சிக்குக் கிடைக்கும். மொத்தமுள்ள 538வாக்குகளில் 270 வாக்குகளை பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

புஷ்சுக்கே வெற்றி?:

Kerryஇதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கை மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகளின் எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளின்படி,இப்போதுள்ள சூழலில் தேர்தலில் ஜார்ஜ் புஷ்சுக்கே அதிகமான வெற்றி வாய்ப்பு உள்ளது.

தாங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி ஜார்ஜ் புஷ்சுக்கு 288 வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், புஷ் மீண்டும் அதிபராகப்பதவியேற்பது உறுதி என்றும் குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது.

அப்போது புளோரிடா.. இப்போது ஓகியோ..

கடந்த 2000ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலிலும் ஜார்ஜ் புஷ்சுக்கும அல்கோருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியில் புளோரிடா மாகாணத்தின் வாக்கு தான் முடிவை நிர்ணயித்தது. இந்த மாகாணத்தின் வாக்கு எண்ணிக்கையில் பெரும்குழப்பம் ஏற்பட்டது. மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, நீதிமன்றத் தலையீட்டுப் பிறகு ஜார்ஜ் புஷ் வென்றதாகஅறிவிக்கப்பட்டது.

அதே போன்ற நிலையில் இப்போது ஒகியோ மாகாணம் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+