வக்கிர மீரான் கொலை: 3வது மனைவி கைது
நெல்லை:
நெல்லை நர்சிங் பயிற்சி பள்ளி நிர்வாகி மீரான் மைதீன் கொலை வழக்கில் மீரானின் 3-வது மனைவி மற்றும் ஹோட்டல் அதிபர்கைது செய்யப்பட்டனர்.
நெல்லை பேட்டையில் நர்சிங் பயிற்சி பள்ளி நடத்தி வந்த மீரான் மைதீன் கடந்த 1ம் தேதி வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். மீரான் மைதீன் ஏற்கனவே மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக செக்ஸ் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்.
அவரது கொலைக்கு செக்ஸ் தொடர்புகள் காரணமா அல்லது கொடுக்கல் வாங்கல் காரணமா என்பது குறித்து போலீஸார்விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே ஹோட்டல் நடத்தி வரும் பிரபல தொழில்அதிபர் அகமது மீரான் மற்றும் மீரான் மைதீனின் 3-வது மனைவி கீதா, மேல தாழையூத்தைச் சேர்ந்த ஹக்கீம், முன்னீர்பள்ளம்சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.
மேலும் தாழையூத்தைச் சேர்ந்த கல்குவாரி தொழில் அதிபர்கள் முகமதுமீரான், முகமது இக்பால் ஆகிய இருவரும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சரண் அடைந்தனர். தச்சநல்லூர் அழகியநேரியைச் சேர்ந்த கண்ணன் திருவைகுண்டம் நீதிமன்றத்தில் சரண்அடைந்தார்.
மேலும் தாழையூத்தைச் சேர்ந்த கலைஞர் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கொலைக்கான காரணம்:
இதற்கிடையே கொலைக்கு காரணம் தெரியவந்துள்ளது. செக்ஸ் குற்றச்சாட்டில் மீரான் மைதீன் கைதாகி சிறையில் இருந்தபோது,முகமது மீரானும், அகமது மீரானும் நர்சிங் பயிற்சி பள்ளிக்குச் சென்று மீரான் மைதீனின் இரண்டாவது மனைவி செல்வி, 3வது கீதாஆகியோரிடம் செக்ஸ் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்களாம்.
பின்பு அகமது மீரான், மீரான் மைதீனுக்கு ரூ.40 லட்சம் வரை வட்டிக்கு பணம் கொடுத்திருக்கிறார். பணத்தை திருப்பிக்கேட்டபோது மீரான் மைதீன் தராமல் இழுத்தடிக்கிறார். அதோடு தனது மனைவிகளிடம் அகமது மீரான், முகமது மீரான் தொடர்புவைத்திருந்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கீதாவின் துணையோடு மீரான் மைதீனை கொலை செய்திருக்கிறார்கள். இதை போலீஸார்தெரிவித்தனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications