கலாமுக்கு கொலை மிரட்டல்: 2 பி.இ மாணவர்கள் கைது
பாண்டிச்சேரி:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாண்டிச்சேரி வந்திருந்தபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு மாணவர்களைபோலீஸார் இப்போது கைது செய்துள்ளனர்.
பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரி விடுதலையானதின் பொன்விழாவையொட்டி அம் மாநில சட்டசபை சிறப்புக்கூட்டத்தில் உரையாற்ற புதுவை வந்தார் கலாம். அப்போது புதுவை முழுவதும் வழக்கத்தைவிட மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
கலாமிற்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் காரணமாகவே அந்த அளவுக்கு கடுமையான பாதுகாப்பு போடப்பட்டதுதெரியவந்தது. கலாம் புதுவை வந்த தினத்தன்று காலை ஒரு எஸ்.பி.யின் வீட்டில் சிலர், ஆடியோ கேசட் ஒன்றை வீசி விட்டுஓடினர்.
அந்தக் கேசட்டில் சுற்றப்பட்டிருந்த தாளில், இன்று கம்பன் கலையரங்கத்தில் அப்துல் கலாம் கொல்லப்படுவார். முடிந்தால்காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த கேசட்டில் பழைய தமிழ்ப் பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து கலாமுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
இந் நிலையில் கேசட் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுப்பட்டிருந்தனர்.விசாரணையில் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.
போலீஸார் அவர்களைக் கைது செய்து விசாரித்தபோது, ஒரு பரபரப்புக்காக இப்படி கொலை மிரட்டலை விடுத்ததாகக்கூறியுள்ளனர்.
அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டு மாணவர்களுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும்சம்பந்தமில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications
