Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அராபத்தை உயிரோடு புதைக்க முயற்சி: மனைவி புகார்

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்:

உடல் நலம் மிக மோசமாகி இருக்கும் பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத்தை உயிருடன் புதைத்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றசில பாலஸ்தீன தலைவர்கள் முயல்வதாக, அராபத்தின் மனைவி சுஹா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு பாரிஸ் மருத்துவமனையில் இருந்து தொலைபேசி மூலம் பேட்டிளித்தார் சுஹா.அராபத்தின் அருகில் இருந்து பேசுவதாகக் கூறி இந்தப் பேட்டியளித்துள்ளார் சுஹா. பேசியது சுஹா தான் என்று அல்-ஜசீராதிட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அவரது இப் பேட்டியை அத் தொலைக்காட்டி நேரடியாக ஒளிபரப்பியது. சுஹா கூறியதாவது:

பாலஸ்தீன அதிகாரிகள் சிலர் பாரீசுக்கு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. 40 ஆண்டுகளாக பாலஸ்தீன அதிபர் பதவிவகிக்கும் எனது கணவர் அராபத்தை பதவியில் இருந்து நீக்க அவர்கள் முயல்கிறார்கள்.

அராபத்தை உயிருடன் புதைத்துவிட்டு பதவியைப் பிடிக்கும் சதித்திட்டத்துடன் தான் பாலஸ்தீன ராணுவத் தலைவர்கள் பாரிஸ்வருகிறார்கள். கடவுளின் அருளால் அராபத் குணமடைந்து வருகிறார். விரைவில் நாடு திரும்புவார். நான் இப்போது அவரதுபடுக்கைக்கு அருகிலிருந்துதான் பேசுகிறேன் என்று கூறினார்.

பாலஸ்தீன பிரதமர் அஹ்மத் குரேயா, வெளியுறவுத் துறை அமைச்சர் நபில் சாத் மற்றும் முன்னாள் பிரதமரும் பாலஸ்தீனவிடுதலை இயக்கத்தின் துணைத் தலைவருமான முஹம்மத் அப்பாஸ் ஆகியோர் இன்று பாரீஸ் செல்வதாக இருந்தனர்.

அராபத்தின் நிலையை நேரில் அறிந்து கொண்டு, அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்பது உறுதியானால், பாலஸ்தீன நிர்வாகம்தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க இத் தலைவர்கள் பாரிஸ் செல்லவிருந்தனர்.

இந் நிலையில் தான் இவர்களுக்கு எதிராக பரபரப்பான பேட்டியளித்தார் சுஹா. இதனையடுத்து இந்தத் தலைவர்கள் தங்களதுபாரீஸ் பயணத்தை ரத்து செய்துவிட்டனர்.

இது குறித்து அராபத்தின் மூத்த உதவியாளர் தயீப் அப்துல் ரஹீம் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுஹா மீது அவர்கள்கோபமாக உள்ளனர். அதன்பொருட்டே தங்களது பயணத்தை ஒத்தி வைத்துள்ளனர். சுஹா கூறுவது பாலஸ்தீன மக்களின்கருத்தல்ல. அராபத்தே இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கேட்டால், அதை முற்றிலும் நிரகாரித்து விடுவார் என்றார்.

அராபத் உடல் நலம் தேறி வருவதாக சுஹா கூறினாலும், அவரது உடல் நிலை மிக மிக மோசமாக இருப்பதாக பிரான்ஸ்வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பேர்னியர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+